மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
விஜய்யோ, அஜீத்தோ? சோம்பேறிகளாக இருந்து வென்றவர்களல்ல! ஒவ்வொரு படத்திலும் உயிரை பணயம் வைக்கிறார்கள். பைட் காட்சிகளில் ‘டூப்’ துணைக்கு வர தயாராக இருந்தாலும், ஒரிஜனலுக்கு இணையாகாது என்கிற உண்மை புரிந்தததால், எமனின் காலரை தொட்டுவிட்டு திரும்பக் கூட தயங்கியதில்லை இவர்கள்.
‘மெர்சல்’ படத்தின் ஓப்பனிங் காட்சியும் அப்படிப்பட்டதுதான்! படத்தில் விஜய் ஒரு மேஜிக்மேன்! ஒரு பெரிய தியேட்டரில் புலி ஒன்று நுழைந்துவிட, அங்கிருக்கும் விஜய் அதை அடக்குவது போலக் காட்சி. மேஜிஷியன் என்பதால், அந்தப்புலியை அவரே வரவழைத்தார். அவரே அடக்கினார் என்பது போல போகுமாம் காட்சி. ஆனால் வழக்கமாக இதுபோன்ற சீனுக்கு, கிராபிக்ஸ் புலியைதான் பயன்படுத்தி வந்தது சினிமா. அடிமைப்பெண் எம்ஜிஆர் போல, “இந்தப்படத்தில் ஒரிஜனல் புலியே இருக்கட்டும். மோதிப் பார்த்துடலாம்” என்றாராம் விஜய்.
இந்த காட்சியை படம் பிடிக்க வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள். அங்கு பழக்கப் படுத்தப்பட்ட ஒரு ஒரிஜனல் புலியுடன் கட்டி உருண்டு நடித்திருக்கிறார் விஜய். என்னதான் பழக்கப்பட்ட புலியாக இருந்தாலும், டேஸ்ட் நல்லாயிருக்கே என்று ஒரு கணம் நினைத்திருந்தால்?
நினைக்கவே அச்சமாக இருக்கிறதே?
https://youtu.be/h7GCDTcjESA