மெர்சல் Vs வேலைக்காரன்? சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி!

‘நான் மூன்று முதல்வர்களை எதிர்த்தவன் தெரியுமா?’ என்று இப்பவும் டபாய்ப்பார் டி.ராஜேந்தர்! ‘தம்பி… டெபாசிட் கூட வாங்க மாட்டே’ என்று பலரும் எச்சரிக்க, தனியாக நின்று பல லட்சம் ஓட்டுகளை வாங்கி, பர்கூரில் ஜெயலலிதாவையே லேசாக மிரளவிட்டவர்தான் மிஸ்டர் தன்மான சிங்கம்!

கோடம்பாக்கத்தின் திடீர் தன்மான சிங்கம் ஆகிவிட்டாரோ என்னவோ? விஜய்யின் மெர்சல் படம் வரும்போது, வேலைக்காரன் படத்தை வெளியிட்டாலென்ன என்கிற ஆலோசனையில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். செப்டம்பர் இறுதியில் ஆயுத பூஜை லீவுக்கு வருவதாக முன்பு திட்டமிட்ட ‘வேலைக்காரன்’ டீம், இப்போது அப்படியே தள்ளி தீபாவளி திருநாளன்று திரைக்கு வரலாமா என்று யோசிக்கக் காரணம், இதுவரை சிவாவின் ஒரு படம் கூட தீபாவளி சமயத்தில் திரைக்கு வந்ததில்லை என்பதால்தானாம்.

ஆயுதபூஜைக்கும் தீபாவளிக்கும் அதிகபட்ச இடைவெளி ரெண்டே வாரம் என்பதாலும் இத்தகைய முடிவை அவர் எடுத்திருக்கக் கூடும். ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும், திரையரங்கங்களும் சொல்கிற பதிலை வைத்துதான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கப் போகிறாராம் சிவா.

ஒருகாலத்தில் ரஜினியும் கமலுமே மோதிக் கொண்ட தீபாவளிகள் உண்டு. அஜீத் விஜய் மோதிக் கொண்ட தீபாவளிகள் உண்டு. வரலாறு சிவகார்த்திகேயன் விஜய் மோதலையும் கல்வெட்டில் எழுதட்டுமே, கஷ்டமா? நஷ்டமா?

Read previous post:
பெப்ஸி ஸ்டிரைக்! பெரும் அதிர்ச்சியில் ரஜினி?

Close