செயின் பறிப்பு படத்தால் பெயின் ஃபுல்லான விநியோகஸ்தர்!

வயித்து வலி உனக்கு, வாந்தி பேதி எனக்கா? என பெரும் எரிச்சலில் இருக்கிறார் அந்த விநியோகஸ்தர். பிறகென்னப்பா? ஒரு ஓப்பனிங்கும் இல்லாத ‘மெட்ரோ’ படத்தை திடீரென ரேட் ஏற்றினால் எரிச்சல் வரதானே செய்யும்?

ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் மெட்ரோ திரைப்படம், பெண்களிடம் செயின் பறிக்கும் இளைஞர்களை பற்றிய கதை. மேக்கிங் நல்லாயிருக்கு… மற்றதெல்லாம் கொஞ்சம் வீக்தான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிற நிலையில், தயாரிப்பு தரப்பு படத்தின் மீது வைத்திருக்கும் அநியாய நம்பிக்கைதான் ‘அட போப்பா’ ஆக்கியிருக்கிறது அந்த விநியோகஸ்தரை. முந்தா நேற்று வரை இந்த படத்தை வாங்க ஆள் வந்தால் போதும். ஆன வரைக்கும் லாபம் என்ற நோக்கத்தில் விலை பேசிக் கொண்டிருந்ததாம் தயாரிப்பு தரப்பு. அந்த நேரத்தில் போய் ‘தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் என்ன விலை?’ என்று கேட்டிருக்கிறார் அந்த விநியோகஸ்தர். ஏற்கனவே சில படங்களை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டவரும் கூட. பேசி பேசி பத்து லட்சத்திற்கு பைனல் பண்ணினார்களாம்.

நடுவில் ஒரு நாள் சிலருக்கு ஸ்பெஷல் ஷோ போட்டிருக்கிறார் டைரக்டர். படத்தை பார்த்தவர்கள், “இந்த படம் ஒரு வருஷம் ஓடும். ஏன் ரெண்டு வருஷம் கூட ஓடினாலும் ஓடும்” என்றெல்லாம் பில்டப் கொடுக்க, பார்த்து பார்த்து உருவாக்கியவர்களுக்கு பளீரென நடு நெற்றியில் மின்னல் வெட்டிவிட்டதாம். விற்ற வரைக்கும் போகட்டும். இனி வர்ற விநியோகஸ்தர்கள் மண்டையில் கெட்டி உருண்டை பிசைஞ்சுட வேண்டியதுதான் என்று காத்திருக்க, விலை பேசிவிட்டு போன அந்த விநியோகஸ்தர் மீண்டும் என்ட்ரி.

‘‘பத்து லட்சம் பேசினோமில்லையா? அதை சரியா முடிவு செய்யாமல் பேசிட்டோம். இப்ப நாற்பது லட்சத்துக்கு குறைவா கொடுக்கறதா இல்ல. உங்க வசதி எப்படி?” என்றார்களாம்.

பால் காய்ச்சும் போது ஒரு ரேட். டிக்காஷன் ஊற்றும் போது ஒரு ரேட். குடிக்கறதுக்கு வாயில வச்சா அந்த நேரத்தில ஒரு ரேட் கேட்பாய்ங்களோ? என்று மிரண்டு போன விநியோகம் எடுத்தார் ஓட்டம். படம் இன்று தியேட்டருக்கு வந்திருக்கிறது.

ஆள் வைத்து தியேட்டர் தியேட்டராக விசாரித்த விநியோகஸ்தர், “அப்பாடா” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாராம். “இனிமே அவங்க வந்தா அஞ்சுக்கு கேட்டு அலற விடுறேன் பாரு…” என்று இவர் பல்லை நறநறப்பதுதான் பகீர் என்கிறது. மெசேஜ் சொல்ல வந்த படத்துக்கே மெசேஜ் சொல்றாரேப்பா நம்ம ஆளு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க சிவா!

சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிக்கும் படமான ரெமோ, களை கட்ட ஆரம்பித்துவிட்டது. எப்போது அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியானதோ, அந்த நிமிஷம் முதல் கொண்டே சிவகார்த்திகேயன் என்ற...

Close