எம்.ஜி.ஆர் ரசிகர்களை வளைக்க விஜய் போடும் புதிய திட்டம்! ஒண்ணு விடாம தேடுறாங்களாம்…

சிம்பு அஜீத் ரசிகனாக நடிப்பதும், ஆர்யா அஜீத் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், அஜீத் தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொள்வதும்…. துண்டு துக்கடா நடிகர்கள் எல்லாம் தன்னை விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதும், ஏதோ பீறிட்டு வரும் அன்பினால் அல்ல! எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு கணக்கு இருக்கிறது. ராமராஜனின் எம்ஜிஆர் பக்திக்கும், விஜய்யின் எம்ஜிஆர் பக்திக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜனங்களுக்கு புரிகிற இந்த கணக்கு, ஐயோ பாவம்… சம்பந்தப்பட்ட நடிகர்களுக்குதான் புரிவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் அல்லவா? அந்த படத்தில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகராக வருகிறாராம். படம் முழுக்க விஜய் தன் காதலியிடம் பாடுவதாக அமைந்திருக்கும் குட்டி குட்டிப் பாடல்கள், எம்.ஜி.ஆரின் ரொமான்ஸ் பாடல்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். தன் ஆசையை அவர் அட்லீயிடம் சொல்ல, “அதுக்கென்ன? செஞ்சுட்டா போச்சு” என்று கூறிய அவரும், எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற டூயட்டுகளை லிஸ்ட் போட ஆரம்பித்திருக்கிறார்.

இப்படி பயன்படுத்தும் போது ரைட்ஸ் பிராப்ளம் வருமே? அங்குதான் புத்திசாலித்தனமாக வேலை பார்க்கிறது மூளை. ஒரு பாடலை அப்படியே எடுத்து பயன்படுத்தலாம். ஆனால் இத்தனை வினாடிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை தாண்டி பயன்படுத்தும் போதுதான் ரைட்ஸ் வாங்க வேண்டும். அதனால் விஜய் பாடும் எம்ஜிஆர் பாடல்கள், அந்த குறிப்பிட்ட அளவுக்குள் முடிந்துவிடுமாம். சரி… ஏன் திடீரென எம்ஜிஆர் மீது அவருக்கு ஆசை வந்திருக்கிறது.

புரட்சித்தலைவருக்கான ஓட்டு வங்கி இன்னும் சரியாமல் சிதையாமல் அப்படியே இருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால், எம்ஜிஆர் காலத்தில் பிறந்திராத பொடிசுகள் கூட, எம்ஜிஆர் பாடல்களையும் படங்களையும் ரசித்து பார்க்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்து விஜய் புதிதாக ஆரம்பிக்கப் போகும் பிசினசுக்கு(?) கைகொடுக்கும் என்ற நம்பிக்கைதான்!

கடலோரம் வாங்கிய காற்று… குளிராக இருந்தது நேற்று….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெங்கட் பிரபுவின் ரகசிய படம்! யாரும் படம் கொடுக்காததால் வந்த விரக்தியா?

ஒரு காலத்தில் அஜீத் வா... வா... என்று அழைக்க, இன்னொரு பக்கம் சூர்யா வா... வா... என்று அழைக்க, இதென்னடா வெங்கட் பிரபுவுக்கு வந்த வாழ்வு என்று...

Close