தொல்லையை தாண்டிட்டாரு மிருதன்!

சினிமாக்காரர்களின் கண்களுக்கு இப்போதெல்லாம் படு பயங்கரவாதிகளாக காட்சியளிப்பது சென்சார் உறுப்பினர்கள்தான். சாமிப்படம் எடுத்தால் கூட, அதில் வர்ற குங்குமம் ஏன் ரத்த கலராயிருக்கு? என்று கேட்பார்கள் போலிருக்கிறது. குங்குமத்தோடு கலரே அதுதான்ங்க சாமீய்ன்னு சொன்னாலும், ‘கட்’ என்று கூறிவிட்டு பைலை குளோஸ் பண்ணுகிற அட்ராசிட்டி அதிகரித்து வருவதால்தான் இந்த அய்யோ குய்யோ!

“சொசைட்டிக்கு நிறைய நல்ல கருத்தை சொல்லியிருக்கோம். பொல்யூஷன் பற்றி உரக்க பேசுகிற படம் எங்க படமாதான் இருக்கும். படத்துல ஒரு சீன் கூட ஆபாசம் இல்ல. அவ்வளவு ஏன்? ஹீரோயின் இடுப்பு தெரிகிற மாதிரி கூட காட்சிகள் இல்லை” என்றெல்லாம் இந்த மிருதன் படம் பற்றி சிலாகிக்கிறார் இயக்குனர் ஷக்தி சவுந்தர்ராஜன். அப்படியிருந்தும் படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டது சென்சார். இதெல்லாம் ரொம்ப அக்கப்போர்ங்க. கொஞ்சம் மறு பரிசீலனை பண்ணுங்க என்றெல்லாம் சண்டை போட்டாலும், அதிகாரிகள் காதில் விழுந்தால்தானே?

இதனால் இந்த வாரமே ரிலீஸ் ஆக வேண்டிய மிருதன், சென்சார் சட்டிபிகேட் உருப்படியா வரட்டும். அதற்கப்புறம் வரலாம் என்று காத்திருந்தது. தற்போது மறு தணிக்கைக்கு போன மிருதன் குழுவுக்கு நல்ல செய்தி. யெஸ்… படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்களாம். வருகிற 19 ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறான் மிருதன்.

திருவிழாவுக்கு நாள் குறிச்சாச்சு, ஜெயம் ரவி ரசிகர்களே… மேளம் நாதஸ்வரத்துக்கு சொல்லியாச்சா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்க்கு பெரிய மனசு! அதைவிட பெரிய மனசு ஜீவாவுக்கு!

ஒன்லி இன்கமிங்.... இந்த கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் பல முன்னணி ஹீரோக்கள். அவர்களிடமிருந்து நார் உரிப்பதற்குள் கட்டைவிரல் சுண்டு விரலாகி, சுண்டு விரலும் சுண்டைக்காய் விரலாகிவிடும். இந்த...

Close