முன்னாடி விட்ட மாதிரி இந்த முறை விடக்கூடாது! ஜெயம் ரவி படத்திற்கு விநியோகஸ்தர்கள் குறி!
ரெண்டையும் ஒண்ணையும் கூட்டுனா மூணு. மூணையும் அஞ்சையும் கூட்டுனா எட்டு. எனக்கு எட்டாம் நம்பர் ராசி என்றெல்லாம் சுற்றி வளைத்து கணக்குப் போடாமல் உழைப்பால் வென்று, நிஜமாய் நின்றவர் ஜெயம் ரவி. 2015 வருடத்தின் ஹாட்ரிக் ஹிட் ராஜாவே ரவிதான்!
ஆவேரஜ் வெற்றி கொடுத்தாலே அடிச்சுக்கோ, பிடிச்சுக்கோ என்று ஆக்டர்களின் பின்னால் ஓடும் வியாபார உலகம், ஜெயம் ரவியின் ஸ்டன்னிங் வெற்றிக்கு பின் சும்மாயிருக்குமா? அவர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் மிருதன் படத்திற்கு வரவேற்பு கொடுக்க க்யூ கட்டி நிற்கிறார்களாம். இந்த க்யூவில் ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் நிற்பது இவரை வைத்து ஹிட் அவரது முந்தைய தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சந்தோஷத்தையும் வாரி வழங்கியிருக்கிறது.
அது மட்டுமல்ல, ஏதோவொரு காரணத்தினால் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் படங்களை தவறவிட்டதால் லாபத்தை பார்க்காத தியேட்டர்காரர்களும் எப்படியாவது மிருதன் படத்தை தங்களின் தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று துடிக்கின்றனராம். இப்படியாக தியேட்டர்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட போட்டியினால் மிருதன் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 400 தியேட்டர்களில் மிருதன் படம் வெளியாக உள்ளது.
ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம்!