தன் தம்பி தங்கக் கம்பி! சவரக்கத்தியும் ஷார்ப் மிஷ்கினும்!

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சாக இருக்கலாம். அதற்காக ‘அண்ணனுக்கு தன் தம்பி தங்கக் கம்பி’ என்கிற பழமொழிக்கெல்லாம் அசைந்து கொடுப்பவரல்ல மிஷ்கின். ‘அண்ணே… நான் உங்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேரட்டுமா?’ என்று கேட்டவரை ‘அடப் போறீயா… இல்ல போட்டுத்தள்ளவா?’ என்கிற அளவுக்கு கோபப்பட்டாராம். ஆனால் விடாப்பிடியாக இருந்த தம்பியை, தனது கடைசி அசிஸ்டென்ட்டாக சேர்த்துக் கொண்டு அதே அளவுக்குதான் முக்கியத்துவமும் கொடுத்து வந்தார்.

ஒரு வழியாக தம்பி வளர்ந்து தங்க கம்பியாகிவிட்டார். ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா மிஷ்கினின் தம்பியேதான். இயக்குனர் ராம், மற்றும் மிஷ்கின் இருவரும் மெயின் ரோலில் நடிக்க… பூர்ணா ஹீரோயினாக நடிக்கும் இப்படம் பிப்ரவரி 9 ந் தேதி திரைக்கு வருகிறது.

திரைக்கதை வசனத்தை மிஷ்கினே கவனித்துக் கொள்கிறார். அப்புறமென்னவாம்?

முதல் பத்து ஹீரோக்களுக்குரிய முக்கியத்துவத்தை இந்த காம்பினேஷனுக்கு கொடுத்து சந்தோஷப்பட்டிருக்கிறது தியேட்டர் வட்டாரம். எப்படி? கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் வெளியிடும் சவரக்கத்தி சுமார் 400 தியேட்டர்களில் வெளியாகிறது.

‘கத்தி ஷார்ப்பா இருக்கு’ என்பதுதான் படத்தை பற்றி கோடம்பாக்கத்தில் கசியும் முன் தகவல்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Savarakathi – Moviebuff Sneak Peek

https://www.youtube.com/watch?v=PPbm-zDLTm0&feature=youtu.be

Close