தயிரும் பீரும் கலந்தது! செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ!
தயிர் சாதத்தில் பீர் ஊற்றி பிசைந்தது போல சில காம்பினேஷன்கள், எக்கு தப்பாக இருக்கும். அப்படியொரு எக்கு தப்பான காம்பினேஷன் உருவாகி இன்டஸ்ட்ரியையே அதிர வைத்திருக்கிறது. இது எப்படிய்யா சாத்தியம்? அவரோ சீரியஸ் ஆன ஆள். வவ்வால் கறியை வறுத்து சாப்பிட்ட மாதியே ஒரு முக பாவனையோடு இருப்பார். இவரோ படு ஜாலி பேர்வழி. சும்மா தும்மினால் கூட அதிலிருக்கும் ஏழு ஸ்வரங்களிலும் காமெடி தெறிக்கும். இவரும் அவரும் சேர்ந்து ஒரு படத்தில் இணைந்தால் அது சீரியஸ் ஆக இருக்குமா? சிரிக்க சிரிக்க இருக்குமா?
இப்பவே டவுட் எழுகிறதல்லவா? யாரை யார் வெல்லுவாரோ… பட் இந்த காம்பினேஷன் எதிர்பார்ப்பின் உச்சம் என்பது மட்டும் உறுதி.
நேற்று திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் டைரக்டர் செல்வராகவன். அதில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஒரு படம் தரப்போவதாக அவர் குறிப்பிட, அடுத்த சில நிமிஷங்களில் அதை உறுதிப்படுத்தினார் சந்தானம். சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் தில்லுக்கு துட்டு, சந்தானத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் யாரும் எதிர்பாரா விதத்தில் ஒரு கலவையை உருவாக்கியிருக்கிறார் அவர்.
சந்தானத்தின் இந்த தில்லுக்கு, திட்டு விழாமலிருந்தால் சரி!