தனி ஒருவனுக்கு மயங்கிய சூர்யா! மோகன் ராஜாவுக்கு கால்ஷீட்….
ஊரே சேர்ந்து உடுக்கை அடிக்கும் போது, காதை மூடிக் கொள்கிறவன் புத்திசாலியாக இருக்க மாட்டான். அப்படிதான் ‘தனி ஒருவன்’ பற்றி தமிழ்நாடே பேசிக் கொண்டிருக்க, “படத்தை உடனே பார்க்கணுமே” என்று பிரியப்பட்டாராம் சூர்யா. அவர் விரும்புகிறார் என்றால் அப்பீல் ஏது? தனது சொந்த அக்கறையில் பிரத்யேகமாக அவருக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறார் ‘தனி ஒருவன்’ டைரக்டர் மோகன் ராஜா.
இன்டர்வெல் சமயத்திலேயே ராஜாவை கட்டிப்பிடித்துக் கொண்டாராம் சூர்யா. மிச்ச மீதி பாராட்டுகளை கால்ஷீட்டாகவே கொடுத்துவிட்டார் என்றால் பாருங்களேன். “உங்க படத்துல நடிக்க ஆசையா இருக்கேன். நடுவில் ஹரி படத்தை முடிச்சுட்டு உங்களுக்குதான் கால்ஷீட்” என்று சூர்யா கூற, தனது ‘தனி ஒருவன்’ முதலாளி ஏஜிஎஸ் நிறுவனத்தையே இந்த படத்தையும் தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டாராம் மோகன் ராஜா.
சிரமப்பட்டு படம் பிடிச்சது ஒரு காலம். சீட்டுக்கட்டு உருள்றதுக்குள்ள ஒரு படத்தை முடிவு செய்யறது இன்னொரு காலம். ராஜாவுக்கு இதுதான்யா பொற்காலம்!
அய்யய்யோ… இவரையா அடுத்த படத்துல டைரக்ட் பண்ண போறாரு மோகன் ராஜா ..
சார் இப்பதான் எதோ மேல எந்திரிச்சி வர்றீங்க.. அதுக்குள்ளே பாம்பு புத்துக்குள்ள கை விட்ட மாதிரி ஏன் சார்… இவரோட ராசிதான் தெரியும்முள்ள.. சமீபத்துல எவ்வளவு பெரிய சாதனையெல்லாம் பண்ணி நெறைய பேர குழிக்குள்ள தள்ளி இருக்காரு.. இவருகிட்ட மாட்டாதது ஹரி மட்டும் தான்.. ஏன்னா ஹரி எந்த கம்ப்ரமைசும் பண்ண மாட்டரு…