ஷகிரா மாதிரி ஆடணும், பாடணும்… முமைத்கான் முழக்கம்!
‘ஆட்ற ஆட்டத்தில், உடம்புல இருக்கிற பார்ட்ஸ் ஏதும் கழண்டு விழுந்து விடுமோ?’ என்று அஞ்சுகிற அளவுக்கு ஆடுகிற பல கவர்ச்சி பாம்கள் திரிந்த ஏரியாதான் கோடம்பாக்கம். ‘சிஐடி சகுந்தலா ஆடாத ஆட்டமா, ஜெயமாலினிக்கு ஈடா யாராவது வர முடியுமா? அவங்க அக்கா சோதி லட்சுமி..? வாவ்…’ என்றெல்லாம் பொக்கை பல் தெரிய சிரிக்கும் பெரிசுகள் கூட அதற்கப்புறம் வந்த ரகசியா, முமைத்தான் டான்சுகளை பார்த்து நாடி நரம்பெல்லாம் கரண்ட் பாஸ் செய்து கொண்ட நிஜத்தை மறுக்க முடியுமா?
இவர்களில் ரகசியா மட்டும் லாரி டயர் ஆகி நாளாச்சு. முமைத் இன்னும் அதே ரப்பர் உடம்புக்காரியாகதான் இருக்கிறார். நேற்று சென்னை வந்து பிரஸ்சை சந்தித்த முமைத் ஆசைகளில் ஒன்று ஷகிரா ஆக வேண்டும் என்பதுதான். ஷகிராவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பாப் உலகின் பைங்கிளியான ஷகிராவின் ஆட்டத்தில் மனம் சுளுக்கி, உடல் வழுக்கி கிடக்கும் இளைஞர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அப்படிதான் ஆக வேண்டுமாம் முமைத்துக்கும்!
சுமார் 200 படங்களுக்கு மேல் குத்தாட்டம் போட்டிருக்கும் முமைத்கான், ஓரிரு படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இப்போது முதன் முறையாக பாடகியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அடிக்ஷன் என்ற பெயரில் அவர் வெளியிட்டிருக்கும் ஆல்பத்தில் அவரே பாடி அவரே ஆடியும் இருக்கிறார். இந்த பாடலை யூ ட்யூபிலும் வெளியிட்டிருக்கிறாராம். ஷகிராக்கா பார்த்தால்தான் என்னாகுமோ என்று அச்சமா இருக்கு!
யு ட்யூபில் இந்த வீடியோ யூடியூபில் வெளியான ஒரு வாரத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இனி படங்களில் பாட வாய்ப்பு வந்தால் நிச்சயம் பாடுவேன் என்கிறார் முமைத்கான். இந்த மியூசிக் ஆல்பத்திற்கு சர்வதேச புகழ்பெற்ற டினே ஷெய்ஸ்வுட் இசையமைத்திருக்கிறார்.