பாப்பா நேத்து ராத்திரி திடீர்னு ஐதராபாத் போயிட்டா

ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படமான ‘காட்டுமல்லி’ படத்தை அவர் இன்னும் முடித்துத்தரவே இல்லை. பஞ்சாயத்து ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சென்னை வடபழனியில் அவர் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு நேரடியாகவே சென்று விட்டார்கள் படத் தயாரிப்பாளர்களும், அவர்களுடன் வந்த இன்னும் சிலரும்.

ஒருவர் வந்தாலே ஓட்டல் கதவு திறக்காது. இதில் ஒன்பது பேர் வந்தால்? ‘ரிசப்ஷன்ல உட்காருங்க’ என்று கூறிவிட்டு கீழே இறங்கி வந்தாராம் நடிகையின் அம்மா. ஒருவர் முகத்திலும் சாந்தமில்லை. சட்டென்று நிலைமையை புரிந்து கொண்ட அம்மா, ‘பாப்பா நேத்து ராத்திரி திடீர்னு ஐதராபாத் போயிட்டா. இன்னைக்கு ஈவ்னிங் வந்துருவா. அவ வந்ததும் கூப்பிடுறேன். கண்டிப்பா உங்க படத்துல நடிச்சு கொடுப்பா’ என்று கூறி ஆசுவாசப்படுத்தி அனுப்பிவிட்டார். தாய்குலம் சொன்ன மாதிரி, ஸ்ரீதிவ்யா ஐதரபாத்துக்கு போயிருந்தாரா என்ன? ம்ஹூம்…

அறைக்குள்தான் இருந்தார். நிலைமையை சமாளிக்க படு ஸ்பீடாக செயல்பட்ட ஸ்ரீதிவ்யா, அதற்குள் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்ல, ‘நீங்க ஏன்யா அங்கெல்லாம் போறீங்க?’ என்று டோஸ் விழுந்ததாம். காட்டுமல்லின்னு பேரு வச்சுட்டு, இப்படி கொதிக்கிற கொள்ளியா திரிய விடுதே விதி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜனாதிபதி விருது பெற்றவர் நடிக்கும் “ விருத்தாசலம் “

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படத்திற்கு “ விருத்தாசலம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விருதகிரி என்ற புதுமுகம்...

Close