‘சலாம் டூ கலாம்’ – கலாமிற்கு ஒரு காணிக்கை’ இசை வீடியோ ஆல்பம்
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் அக்டோபர் 15. அதையொட்டி சென்னை குன்றத்தூரில் உள்ள ‘லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளிக்கூட’மும், ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவும் இணைந்து ‘சலாம் டூ கலாம் -கலாமிற்கு ஒரு காணிக்கை’ என்ற பெயரில் ஒரு இசை வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ ஆல்பத்திற்கு ‘சாதகப் பறவைகள்’ இசைக்குழு இசையமைத்திருக்கிறது. இந்த பாடலுக்கு பள்ளிக்கூட மாணவ & மாணவிகள் நடனமாடியிருக்கின்றனர்.
அப்துல் கலாம் பிறந்த நாளை ‘மாணவர்கள் தினம்’ என்று இந்திய அரசாங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட வேண்டுமென்று இவர்கள் மத்திய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காக 31,00,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர். இந்த வேலை கடந்த 5 வருடங்களாக நடைபெற்று இருக்கிறது.
‘சாதகப் பறவைகள்’ சங்கர் இசையமைத்திருக்கும் இந்த இசை வீடியோ ஆல்பத்தில் இடம் பெற்றி ருக்கும் பாடலை கவிஞர் பரிணாமன் எழுத, அஜய், கவிதா, யோகிதா ஆகியோர் பாடியிருக்கின்றனர். ஒளிப்பதிவு:முருகசரவணன். இயக்கம்:ராம். ‘லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்’ பிரின்ஸிபால் ஜான் சேவியர் தங்கராஜ். இந்த இசை வீடியோ ஆல்பத்தை தயாரித்திருக்கிறார்.
SALAM2KALAM – A music video album released as a tribute to Dr.APJ Abdul Kalam by Little flower Matric.Hr.Sec.School and Sankar’s “Saadhaga Paravaigal “.Dr.APJ Abdul Kalam,the great nationalist and proud to be a Tamilian who we lost recently, taking his notable contribution for the students community and we have worked for the past 5 years to honour the great soul to appeal the government and to declare his birthday of 15th October as “Indian Students Day” and we have got the support from 31 lakh people from in and around chennai.This music video album is composed by Mr.Sankarram from Saadhaga Paravaigal,sung by Ajay,Kavitha and Yogitha,Lyrics by Kavingar Parinamam,Cinematography by Mr.Muruga Saravanan,Directed by Mr.Ram and Produced by Mr.S.John Xavier Thangaraj Principal of Little flower Matric.Hr.Sec.School.
NOTE ; PLEASE WATCH – A TRIBUTE TO KALAM MUSIC VIDEO ON THIS LINK —www.youtube.com/watch?v=UD8R0Ac8prA