நடிகையிடம் தொலைந்த இசையமைப்பாளர்! கூகுள் தேடுதே பழைய காதலை!

தமிழில் மிக சொற்பமான படங்கள்தான் இவர் இசையமைத்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய படங்கள் அரை டஜன் இருக்கிறது. தமிழ்சினிமாவின் வளர்பிறை இசையமைப்பாளர் என்ற நம்பிக்கைக்குரிய அடையாளத்துடன் இருக்கும் இசையமைப்பாளர் மரியா மனோகர் தனது முகப்புத்தகத்தில் எழுதியிருக்கும் ஒரு விஷயம்… நிஜமாகவே ஷாக். காதல் அரங்கம் என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ஷெர்லிதாஸ், மரியா மனோகரின் மனசை கொள்ளையடித்தவராம். அதை அவரே குறிப்பிட்டதுடன், அந்த காதலை ஜீவனுள்ள வார்த்தைகளால் வடித்தெடுத்து எழுதியிருக்கிறார்.

அரைகுறையாக இந்த கட்டுரையை அவர் முடித்திருந்தாலும், ஷெர்லி எங்கே சார் என்ற கேள்வியுடன் அவரை தொடர்பு கொண்டோம். அவர் சொன்ன பதில், இந்த பதிவின் கீழே- அதற்கு முன் அவர் எழுதிய பகுதியை படியுங்கள்…

திரைத்துறையில் நான் இசையமைப்பாளராக அறிமுகமான போது ,INTERVIEW எடுக்க T V அல்லது பத்திரிக்கை நண்பர்கள் வந்தால் ,முதலில் அவர்கள் என்னிடம் கேட்பது மரியா மனோகர் என்ற பெயரில் இருக்கும் “மரியா” யார்?” என்பதைத்தான். நண்பர்கள் கூட சில நேரம் கேட்பதுண்டு….

ஒரு காலைப் பொழுதில் Deccon chronical பேப்பரின் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்தி:

“என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் எல்லா நன்பர்களும் என்னிடத்தில் ‘புரப்போஸ்’ செய்கிறார்கள் /நன்பர்கள் மனதை நோகடிப்பதை விட/ சலனம் தரும் எனது வெளித் தோற்றத்தை மாற்றினேன்.. என்று மொட்டை தலையுடன் அவள் பேட்டி அளித்திருந்தாள். “காதல் கதை” படத்தின் Heroin-னாக அவள் அறிமுகமாகி, அப்போது தான் நடித்து முடித்திருக்கிறாள் என்று அந்த செய்தித்தளை படிக்கும்வரை, எனக்குத் தெரியாது.அதை படித்தவுடன் மனது Rewind ஆகி.. நினைவுகள் எனக்குள் Replay ஆனது… ஷெர்லி தாஸ், இவர் இயக்கிய ஒரு குறும்படத்துக்கு, நான் Sound desighning செய்து PreMix முடித்தவுடன் அவர் இம்ப்ரஸ் ஆகி விட்டார்/ அந்த குறும்படத்தில், பாசத்துக்காக ஏங்கும் ஒரு பணக்கார குழந்தையின் உளவியலை அவர் கையாண்டிருந்த விதத்தைப் பார்த்து, எனது மனதில் பட்டதை சொல்லிக்கொண்டிருந்தேன்,அவர் ஆர்டர் செய்த Fish dish-ஐ சாப்பிட்டபடியே.. /அந்த ஹோட்டலுக்கு Fish food விரும்பிகள் எல்லோரும் வருவார்கள் என்பதை அவர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால்,அப்போது நான் பல இசையமைப்பாளர்களுக்கு Freelance Recording செய்து கொண்டிருந்ததால்/ food எல்லாம் studio-விற்கே வந்துவிடும்/அதிகமாக இப்படிபட்ட ஹோட்டல்களுக்கு போனது கிடையாது.

அன்று சாப்பிட்ட Fish food-ஐ பற்றி, மறுநாள் அவளிடம் தொலைபேசியில் நான் மிகவும் ரசித்துச்.. சொல்லிக்கொண்டிருந்தேன்/பைக் எடுத்துட்டு வந்திரு, இன்னைக்கு வேறொரு Sea food Hotel-ல உனக்கு introduce பன்றேன் என்றதும் /அடுத்த அரைமணி நேரத்தில் ladies Hostel வாசலில் bike நின்றது. அட்டகாசமான tight fitting உடையில் ,மாடியில் இருந்து ஸ்டைலாக அவள் இறங்கிக் கொண்டிருந்தாள்,நான் மெதுவாக கிறங்கிக் கொண்டிருந்தேன்.. அவள் எனது பைக்கை நெருங்கிய போது,தோளில் கிடந்த எனது shoulder bag-ஐ எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது வைத்துக்கொண்டேன், ஏறி உட்கார்ந்தாள் இடைவெளி இல்லாமல்.. shouder bag-ஐ பார்த்தேன் சிரித்தது…

அந்த ஹோட்டல் intirior-ன் அமைப்பும் lighting desighn-ம் மனதில் அமைதியை தருவதற்காக வடிவமைத்தது போலிருந்தது.நாங்கள் இருவரும் ஒரு corner-ல் /இன்னொரு இருவருர் மற்றொரு corner-ல் அமர்ந்திருந்தனர்.எனக்கு கொடுக்க வேண்டிய payment கொடுத்து விட்டு,’Mix பன்னும் போது ஏதாவது ஒரு music track-ஐ CD-ல் இருந்து எடுத்துப் போட்டு மிக்ஸ் பன்னிவிடு “என்றாள், அதற்க்கு “கீபோர்டு நான் வாசிப்பேன், Track போடுவதை விட music sequence பண்னுவது எனக்கு ஈசி” என்றேன் .

Hotel Bearer-ரிடம் பில் சொல்லிவிட்டு என்னை பார்த்து புன்னகைத்துக்கொண்டே சொன்னாள்”மனசுக்கு அமைதி வேண்டும் என்று தோன்றும்போது, தியானம் செய்வதை விட, பிடித்தவர்களுடன் உணவு உண்ணுவதை விரும்புவேன்”என்று.அதுவரை நான் அடக்கி வைத்திருந்த கேள்வியை அவளிடம் கேட்டேன் “நீ film-ல் heroin-ஆ நடிக்கலாமே?”.அதற்க்கு அவள் “அப்போ, நீ சாப்பிடும்போது சாப்பாட்ட சரியா கவனிக்கல ?”என்றாள். உண்மைதான், அந்த கண்களும்,நாசியும்,அமைதியாக புன்னகைக்கும் உதடும் அதைவிட அந்த Hair style-.. நான் என்ன சாப்பிட்டு முடித்திருந்தேன், என்பது எனக்கே தெரியவில்லை.

அதன் பின் பல sea food ஹோட்டல்களுக்கு அவளுடன் சென்று சாப்பிடும் போது, அவளுக்கு கிடைக்கும் தியான அனுபவம், எனக்கு மட்டும் கிட்டவே இல்லை../ ஆனால் Tune-கள் பொங்கோ பொங்கென்று பொங்கியது.. [பின்னாளில் அந்த tune-களுக்கு கவிஞர்கள் அந்த சம்பவங்களை நேரில் பார்த்ததுபோல் வரிகள் எழுதிக் கொடுத்தது ஆச்சரியமான விஷயம்..]

“சரி editing-ல் out எடுக்கும் போது music director டைட்டிலில் போடுவதற்க்கு north indian ஸ்டைலில் பேரை மாற்றி விடலாமா?” என்றாள்.” M.மனோகரன் என்ற, என் original பெயரையே போடு” என்றேன்”.”அது ரெம்ப normal-லா இருக்கிறது” என்று சொன்னவள்.”உன் அப்பா பெயர் என்ன?” என்று கேட்டாள்.”மாரியப்பன்” என்றவுடன், hotel bearer கொண்டுவந்த பில்லில் Mariyappan Manogaran என்று எழுதி/ முதலில் உள்ளதில் appan-ஐயும்,அடுத்ததில் an-ஐயும் பென்சிலால் அடித்து Mariya Manogar-ஆக்கினாள்.. ஒரே பெயரில் அப்பாவும் மகனும் ஒன்றாகிப் போனதில் ,எனக்கு ரெட்டை மகிழ்ச்சி/ அதை பார்த்துக் கொண்டிருந்த Berer-ரிடம் டிப்ஸை நீட்டிவிட்டு என்னை பார்த்து “போகலாமா?” என்றாள்./வெளியே வந்த போது மழை தூறிக் கொண்டிருந்தது.வாசலில் நான் தயங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்,/அவள், மழையை ரசித்தபடி.. நனைந்து கொண்டே.. பைக் அருகே சென்று, என்னைத் திரும்பி பார்த்தாள்/நடந்தேன்..

மழையில் நனைந்து கொண்டே பைக்கை kick start செய்தேன்…குளிரில் உடம்பு ‘பைக்’குடன் போட்டி போட்டுக் உதறிக் கொண்டிருந்தது / போகலாமா என்றேன்,எனது தோளிள் ஒரு கை வைத்து ஏறப் போகும் முன் கொஞ்சம் நின்று,பெட்ரோல் டேங்க் மீது கிடந்த எனது Bag-ஐ எடுத்து “இதை உனது shoulder-ல மாட்டிக்கிறயா?“ என்றவள், மாட்டிய பின் அமர்ந்தாள்/மனசுக்குள் சிரித்துக் கொண்டே முன்னால் விரிந்து கிடந்த சாலையைப் பார்த்தேன்../வானம் சிந்திய மழைத் துளிகளில்.. பூமி சுத்தமாகிக் கொண்டிருந்தது…

இனி நம்மோடு மரியா மனோகர்-

அந்த ஷெல்லியை அதற்கப்புறம் நீங்கள் பார்க்கவில்லையா?

இல்லை. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னாலேயே அவங்க ஒரு துறவு நிலையில்தான் இருந்தாங்க. ஓஷோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்தாங்க. எங்கே போனாங்க இப்ப எங்கேயிருக்காங்க என்றே தெரியவில்லை. நானும் கூகுள் பேஸ்புக்குன்னு நிறைய தேடிகிட்டேயிருக்கேன். பார்த்தா பேசினா சந்தோஷமா இருக்கும். ஆனால் எங்கு போய் தேடுவது? என் யூகப்படி அவங்க சாமியாரா போயிருந்தாலும் ஆச்சர்யமில்லை.

பேச்சில் கவலை தெறிக்கிறது மரியாமனோகரிடம். சும்மா படிச்ச நமக்கே இப்படியிருக்குன்னா, மனசார காதலிச்சவருக்கு? ஹ்ம்… இப்படிதான் பல சினிமாக் காதல்கள் ஓப்பனிங்லேயே உள் வாங்கிக்குது!

1 Comment
  1. gk says

    intha sherlidas thaane director velu prabhakaranai kalyaanam seithu kondaar ??

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தரைமட்ட ஓப்பனிங்! லைக்கா – ஜி.வி.பி அதிர்ச்சி!! எனக்கு இன்னொரு வார் அந்து போச்?

டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள்...

Close