மதுரைக்கே வந்து கூவியும் மனம் இளகாத இளையராஜா… மிரளும் மிஷ்கின்

ஆள்தான் இறுக்கமாக இருப்பாரே ஒழிய, யாரையாவது பாராட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டால் குழாயை திறந்துவிட்ட மாதிரி கொட்டுவார் மிஷ்கின். அப்படி பலமுறை இளையராஜாவை பற்றி புகழ்ந்து அவரிடமே வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் அவர். ‘ஒவ்வொரு இயக்குனரும் இசைஞானியோட ஒரு முறையாவது வேலை செய்யணும்’ என்று இவர் ஒரு மேடையில் பேசி வைக்க… ‘நீ என்ன எனக்கு வாய்ப்பு வாங்கி தர்றீயா? உன் வேலைய பார்த்துகிட்டு சும்மாயிரு’ என்று அதே மேடையில் வெளுத்துக்கட்டினார் இளையராஜா.

அதற்கப்புறம் மதுரையில் இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கே நேரில் வந்த மிஷ்கின், ‘நான் என்னோட அப்பாட்ட பேசியே ஆறு வருஷம் ஆச்சு. ஆனால் இசைஞானிதான் என்னோட அப்பா. அவர்ட்ட பேசாம என்னால இருக்கவே முடியாது’ என்று சொந்த பேமிலியை கூட கூசாமல் டேமேஜ் பண்ணிவிட்டு போனார். (மிஷ்கினின் அப்பா இப்பவும் டெய்லர் வேலை பார்க்கிறாராம். இவரும் அவரும் நேரில் சந்தித்தே பல வருடங்கள் ஆகிறதாம்)

இப்படி உணர்ச்சிவசத்தில் சுற்று புற சூழ்நிலையை மறக்கிற மிஷ்கின், நந்தலாலா சமயத்தில் இளையராஜாவிடம் ஏராளமான பாடல்களை வாங்கி அவற்றை அப்படியே பயன்படுத்தாமல் சில பாடல்களை ஓரமாக எடுத்து வைத்துவிட்டார். மிஷ்கினின் பெரும் மெனக்கடலுக்கு பிறகுதான் மீண்டும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜாவுடன் அவரால் இணைய முடிந்தது.

தற்போது பாலா தயாரிக்கும் புதிய படமான பிசாசு மிஷ்கினால் இயக்கப்படும் படம். இது ஆவிகள் தொடர்பான படம் என்பதால், இளையராஜாவை தவிர வேறு எவராலும் பொருத்தமாக பின்னணி இசையை தர முடியாது என்பது மிஷ்கினின் நம்பிக்கை மட்டுமல்ல, படவுலகத்தின் பொதுவான தியரியும் அதுதான். ஆனால் மிஷ்கினை மறுபடியும் தனது ஸ்டுடியோ பக்கமே விடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டாராம் இளையராஜா. எவ்வளவோ முயன்றும் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டதால், தனது முதல் பட இசையமைப்பாளரான சுந்தர் சி பாபுவிடமே மீண்டும் திரும்பிவிட்டாராம் மிஷ்கின்.

‘வாயை மூடி பேசவும்’ படத்தை தினந்தோறும் பத்து முறை பார்க்கும்படி மிஷ்கினை அறிவுறுத்தினால் ஒரு வேளை அடங்குவாரோ?

Read previous post:
கமல் படத்தில் கிரேஸிக்கு இன்சல்ட்?

ரசிகர்களை சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று தயாரிப்பாளர்களை சிரிப்பாய் சிரிக்க வைத்த நகைச்சுவை படங்கள் தமிழில் ஏராளமாக உண்டு. ஒரு ஆக்ஷன் படத்தை எடுப்பதை விடவும் ஆபத்தான...

Close