கதவை சாத்திக் கொண்டு காச்…மூச்! ஆத்திர மிஷ்கின், அசைந்து கொடுக்காத பாலா?

‘நெட்டை தொறக்க முடியல. திட்றானுங்க…அசிங்க அசிங்கமா திட்றானுங்க’ என்று சமீபத்தில் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்த மிஷ்கினுக்கு, அந்த மனக்குமுறலை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவது மாதிரி ஒரு செய்தி. பாழாப்போற நெட்டு காரனுங்களுக்குதான் இப்படியெல்லாம் தகவல் வந்து குவியுது. என்ன பண்ணுறதாம்? உணர்ச்சிகளை ஒரேயடியாக கொட்டி, பின்பு அதிலேயே படுத்துப்புரண்டு பக்க விளைவுகளால் அவதிப்படும் மிஷ்கினுக்கு மேலும் மேலும் மன உளைச்சலை கொடுப்பது போலா நிலைமை வர வேண்டும்? ஐயோ பாவம்!

கடந்த சில வாரங்களுக்கு முன் தனது ‘பிசாசு’ படத்தின் டீஸரை படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் டைரக்டர் பாலாவிடம் காண்பித்தாராம் மிஷ்கின். அதை இரண்டு முறை ஓடவிட்டு பார்த்த பாலா, ‘ஏண்டா… இப்படியா டீஸர் கட் பண்ணுவே? இதை பார்த்தா எவனாவது தியேட்டர்குள்ள வருவானா? போ… வேற கட் பண்ணிட்டு வா’ என்று கூறி அனுப்பிவிட்டாராம். வெறுத்துப்போன மிஷ்கின், வீட்டுக்கு போய் அறைக்கதவை சாத்திக்கொண்டு கன்ட்ரி ஃபுரூட் என்று கத்தி தீர்த்துவிட்டார். விபூதிய விலாவுல பூசிகிட்டா யாருக்கு தெரியப்போவுது? அப்படியும் ஆத்திரம் தீராத பாலா, தன் சிங்கப்பூர் நண்பர்களுக்கு போன் போட்டு காச் மூச்சென்று கவலைப்பட்டாராம். ‘என்னை விட பெரிய படைப்பாளியா பாலா?’ என்றெல்லாம் அவர் ஆத்திரப்பட்டதாக தகவல்.

கோள்மூட்டிகளின் உலகத்தில் குமுட்டி அடுப்பை பற்ற வைத்தால் என்னாகும்? அடுத்த செகன்ட் விஷயம் பாலா காதுக்கு வந்ததாம். சில தினங்களில் வேறொரு புது டீசருடன் பாலா ஆபிசுக்கு போனாராம் மிஷ்கின். சிடியை கையில் கூட வாங்காத பாலா, டீஸர்தானே…? நல்லாதான் இருக்கும். போ என்று சொல்லிவிட, என்னய்யா… அதை ஓடவிட்டு கூட பார்க்காமல் நல்லாதான் இருக்கும்னு அலட்சியப்படுத்துறாரே என்று மேலும் பி.பி.யை ஏற்றிக் கொண்டாராம்.

வழக்கம் போல கதவை சாத்திக் கொண்டு காக்ரே மூக்ரேவாகியிருக்கிறார். படம் வெளிவர்றதுக்குள்ள குடம் நசுங்கிரும் போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிக்க வந்தார் மாமா மகன்! மனசார வாழ்த்தினார் உதயநிதி

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் ஒரு தலைவருக்குரிய அந்தஸ்த்தோடு கொண்டாடப்பட்டதில் வியப்பேதுமில்லை. திரும்புகிற இடங்களில் எல்லாம் அவரது அழகழகான புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்கள். ‘ஹாட்ரிக் அடிக்க வாழ்த்தும்...

Close