ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம் தேசிய விருது குறித்து நா.முத்துக்குமார்

ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போதும் அதில் தவறாமல் ஒன்றிரண்டு தமிழ் படங்களும் கலைஞர்களும் இடம் பெற்று வருவது பாராட்டுக்குரியது. அந்த வகையில் ஆனந்த யாழை மீட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ராமும், அப்படத்தில் முக்கிய வேடத்தில் கலக்கிய சாதனாவும், பாடல் எழுதிய நா.முத்துக்குமாரும்.

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் வென்றிருக்கிறது. (தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை என்றாலும், நல்ல படத்திற்கு ஏதோவொரு பிரிவில் விருது. சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்)

இந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தமிழ்சினிமா பிரமுகர்களும் பத்திரிகையாளர்களும் விருது பெற்றவர்களை சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். இயக்குனர் பாரதிராஜா தங்க மீன்கள் குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த விருதினை தனது தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

விருது பட்டியல் பின்வருமாறு-

சிறந்த நடிகை: கீதாஞ்சலி தாபா, படம் – லயர்ஸ் டைஸ்
சிறந்த துணை நடிகர் – சௌரப் சுக்லா, படம்- ஜாலி எல்எல்பி
சிறந்த இயக்கம் – ஷாஹித்
சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாதனா, படம்- தங்கமீன்கள்,
சோம்நாத் அவ்கதே, படம்- பந்த்ரி
சிறந்த பிராந்திய படம் – தங்க மீன்கள்
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்திற்கான நர்கிஸ் தத் விருது – தலைமுறைகள்
சிறந்த இயக்குனர் – ஹன்சல் மேத்தா, படம்- ஷாஹித்
சிறந்த பொழுதுபோக்கு படம் – பாக் மில்கா பாக்
சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார், படம்- தங்க மீன்கள்
சிறந்த எடிடிங்கிற்கான நடுவர்கள் விருது- சாபு ஜோசப், படம் – வல்லினம்
தேசிய அளவில் சிறந்த படம்: ஷிப் ஆப் தீசியஸ்
சிறந்த துணை நடிகை: ஐடா எல்காஷெஃப்(ஷிப் ஆப் தீசியஸ்),
பெங்காளி நடிகை அம்ருதா சுபாஷ்(ஆஸ்து)
சிறந்த பாடகர்(ஆண்): ரூபாங்கர், படம்- ஜதீஷ்வர்(பெங்காலி)
சிறந்த பாடகி(பெண்): பெலா ஷிண்டே, மராத்தி பாடல் கோடா கோடா
சிறந்த நடன அமைப்பு: கணேஷ் ஆச்சார்யா, படம்- பாக் மில்கா பாக்
சமூக பிரச்சனைகளை அலசும் படம் – குலாபி கேங்(இந்தி)
சிறந்த இந்தி படம் – ஜாலி எல்எல்பி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் சேதுபதியை வேற மாதிரி காட்டுமாம் ‘வன்மம்’

விஜய் சேதுபதியின் வேகத்திற்கு நடுவே கடவுள் போட்ட கற்கள் ஒன்றிரண்டு அவரை லேசாக தடுமாற வைத்தாலும், மனிதர் இன்னும் ஸ்டிராங்காகதான் இருக்கிறார். சினிமாவில் ஜெயிப்பதற்கு முன்பே கேட்ட...

Close