அனிருத்துக்கு போட்டியாக வந்த விஜய் சேதுபதி!

போடா போடி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிற படம் நானும் ரவுடிதான்! தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். மந்திரம் சொல்ல வந்த ஐயரையே மாப்பிள்ளை ஆக்கிவிட்டால் என்னவென்று தோன்றுவது அதிருஷ்டமா? துரத்திருஷ்டமா?

இந்த விஷயத்தில் அப்படியும் ஒரு திருப்பம் நேர்வதாக இருந்தது. யெஸ்… முதலில் இந்த படத்தில் அனிருத்தைதான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் விக்னேஷ்சிவன். அப்புறம் படம் தனுஷ் கைக்கு போனதும், எல்லாமே ஹைலெவலுக்கு போய்விட்டது. விஜய் சேதுபதி, நயன்தாரா , பார்த்திபன் என்று எல்லாவற்றிலும் ஏற்றம்.

“முதல்ல நயன்தாரா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருந்திச்சு. ஆனால் அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். எப்படி நடந்துக்குவாங்களோ என்று இன்னொருபுறம் யோசனையாவும் இருந்திச்சு. ஆனால் ஷுட்டிங்கில எனக்கு அவங்க அறிமுகம் ஆன பத்தாவது நிமிஷத்துல அந்த எண்ணத்தையெல்லாம் அடிச்சு உடைச்சுட்டாங்க நயன்தாரா. அவ்வளவு எளிமையா பழகுனாங்க”.

“ஷாட் பிரேக்குல கேரவேன்ல போய் ரெஸ்ட் எடுக்க மாட்டாங்க. மதியம் லஞ்ச் பிரேக், அதைவிட்டால் பேக்கப்தான். அதுவரைக்கும் அவங்க கேரவேன்குள்ள போய் நான் பார்த்ததில்ல” என்றார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.

படத்தில் பெண் போலீசின் மகனாக விஜய் சேதுபதியும், ஆண் போலீசின் மகளாக நயன்தாராவும் நடித்திருக்கிறார்கள். அப்படின்னா, இதுல எங்கிருந்து வந்தார் ரவுடி? அதுலதான் இருக்கு ட்விஸ்ட். ரெண்டு நாள்ல படம் ரிலீஸ். போய் தியேட்டர்ல பார்த்து தெரிஞ்சுக்கங்க என்றார் விக்னேஷ் சிவன்.

Read previous post:
கண்கலங்கிய சரத்! பிரச்சனைக்குரிய கட்டிட ஒப்பந்தத்தையும் தானே முன் வந்து கேன்சல் செய்தார்!

இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சரத் என்றதும், “வென்றவர்கள் அழைப்பார்கள்... அது வழக்கம்! ஆனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் அழைக்கிறார். என்ன சொல்ல போகிறாரோ?” என்கிற...

Close