நடிகர் சங்க பொதுக்குழு! ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆப்சென்ட்!

விஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு? இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு! வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர் நடிகைகளை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு நிகழ்வுதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான இந்த கூட்டத்திற்கு அவசியம் வரும்படி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. முக்கியமாக ரஜினி கமல் அஜீத் விஜய் வந்தேகயாக வேண்டும் என்றும் எதிர்பார்த்திருந்தார்கள் சங்க நிர்வாகிகள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த ரிசல்ட்? ஏமாற்றம் ஏமாற்றம்.

பொதுவாகவே தான் சார்ந்த துறைக்கு எவ்விதத்திலும் நியாயமாக நடந்து கொள்பவரில்லை அஜீத். படத்தில் நடிப்பார். சம்பளத்தை ஒரு பைசா மிச்சம் வைக்காமல் வாங்கிக் கொள்வார். அதோடு சரி. படத்தின் பிரமோஷன்களுக்கும் வருவதில்லை. பாடல் வெளியீட்டு விழாவோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவோ, எதற்கும் வருவதில்லை. தெருமுனை அடி பம்பு திறக்கிற அளவுக்குதான் நடக்கும் அவர் படம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளும். ரசிகர்களை சந்திக்க மாட்டார். பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார். தன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டு சுக துக்க நிகழ்ச்சிகளுக்கும் நோ மரியாதை. இப்படி தனியொருவராக மாறிவிட்ட அவரை, தாங்கு தாங்கென தாங்குகிறது உலகம். அதுதான் ஒன்றும் புரியாத புதிர்.

இந்த பொதுக்குழுவுக்கு அவர் வர மாட்டார் என்று கிட்டதட்ட ஒரு முன் முடிவுக்கு வந்திருந்தார்கள் நிர்வாகிகள். ஆனால் ரஜினி கமல் விஜய் விஷயத்தில் ஏன் இப்படி? இன்று மாலை தெறி படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்பதால், விஜய் வரவில்லையாம். ரஜினி டெல்லியில் இருக்கிறார். கமல் ஏன் வரவில்லை என்பது அவருக்கே சமயங்களில் புரியாது. இப்படியாகிவிட்ட இந்த பொதுக்குழுவில் இவர்கள் யாரும் வரவில்லை என்பது தனிப்பட்ட உறுத்தலாக இருந்தாலும், பொதுக்குழுவை ஜாம் ஜாமென திருவிழா போல நடத்தி முடித்துவிட்டார்கள் விஷால், நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள்.

26 கோடியில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் விஷால் டீம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி பேக் டூ கபாலி? மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்!

பூசணிக்காய் உடைச்சாச்சு. கபாலி முடிஞ்சாச்சு என்று கிட்டதட்ட அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியின் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் தேவலாம் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். அப்புறமென்ன? தயங்கி, தடுமாறி,...

Close