நான் ஜெயிச்சு வந்தா செய்வேன்! விஷாலின் மணிமண்டப ஜாயின்ட்?

வெறும் அறிவிப்புதான்… அதற்குள் மண்டபம் கட்டி, மாவிளக்கு போட்ட எபெக்டுக்கு ஆளாகி நிற்கிறது தமிழ்சினிமா பிரபலங்கள் மனசு. “சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டித் தருவதாக சொன்ன அம்மாவுக்கு நன்றி நன்றி…” என்று நாலாபுறத்திலிருந்தும் நன்றி மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி, கமல்ஹாசன், விஷால் அணி, சரத் அணி, இவர்கள் எல்லாருக்கும் முன்பாக நடிகர் திலகத்தின் மகன் பிரபு என்று அத்தனை பேரும் அறிக்கைகள் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

சற்று வித்தியாசமாக, விஷால் அணி மட்டும் நேரடியாக பத்திரிகையாளர்களை அழைத்து தங்கள் நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டது. (நேற்று விஜயகாந்த்தை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள் அல்லவா? அதை முதல்வர் ஜெ. எப்படி எடுத்துக் கொள்வாரோ என்கிற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம்) “வந்த இடத்தில் வளைகாப்பு வச்ச கதையாக விஜயகாந்த்தை நேற்று போய் சந்தித்தீர்களே?” என்றொருவர் கேள்வி கேட்க, விழுந்தடித்துக் கொண்டு கும்பிடு போட்டார் விஷால்.

“அண்ணே… நீங்க வேற ரூட்டை திரும்பி விட்றாதீங்க. அவருடைய பிறந்தநாள். அதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்” என்று அடுத்த டாபிக்கை நோக்கி ஓடினார். சிவாஜி மணி மண்டபம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய பிரஸ், இவ்வளவு காலம் அவருக்கு மணி மண்டபம் கட்டாமல் விட்டுட்டோம். இப்போ அரசு சார்பாக கட்டுவது நடிகர்களாகிய உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா? அல்லது வெட்கமாக இருக்கிறதா?

இந்த கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்கவில்லை விஷால். நாங்களேதான் கட்டியிருக்கணும். அதை நினைச்சா வெட்கமா இருக்கு. ஆனால் முதல்வரின் அறிவிப்பு பெருமையா இருக்கு.

இந்த மணி மண்டபம் அரசு கட்டுவது இருக்கட்டும். அரசோடு சேர்ந்து உங்கள் பங்களிப்பாக என்ன செய்ய போறீங்க? இந்த கேள்விக்கு சற்று யோசித்து நிதானமாக, அதே நேரத்தில் கான்பிடன்ட்டாக பதில் சொன்னார் விஷால். “நாங்க ஜெயிச்சு வந்ததும் நிச்சயம் அரசுடன் இணைந்து நாங்களும் அதில் பங்கெடுத்துப்போம்! ”

அப்படியே ஆகட்டும்…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடங்க மாட்டாரு ராஜேஷ்! அடுத்தப்படம் ‘ குடியும் குடித்தனமும் ’

டாஸ்மாக் காட்சிகள் எதையும் காட்டக் கூடாது என்று ஒரு சின்ன உத்தரவு மட்டும் போட்டுப் பாருங்களேன்...சினிமாவிலிருந்தே கழன்று கொண்டு ஓடி விடுவார் டைரக்டர் ராஜேஷ்.எம். அவரது முதல்...

Close