“நிதி இவ்ளோதானா?” விஷால் குழுவிடம் முதல்வர் ஜெ.கேள்வி?

நடிகர் நடிகைகள் கிள்ளியும் அள்ளியும் கொடுத்த நன்கொடை பணத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள். ஒரு கோடியோ பத்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை இவர்கள் முதல்வரிடம் கொடுத்த போது, இவ்ளோதான் உங்களால திரட்ட முடிஞ்சுதா என்றொரு கேள்வியை கேட்டாராம் அவர். முகத்தில் அசடு வழிய, “ஆமாம்மா…” என்று இவர்கள் சொன்னதாக தகவல்! ஒருவேளை இது உண்மையாக இருக்குமாயின், கோடி கோடியாக சம்பாதித்தும் கொடுக்க மனசில்லாத ஹீரோக்களுக்கு பெரிய அவமானம்தான்!

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக இந்த தொகையை முதல்வரிடம் கொடுக்கிற நேரத்தில் இன்னொரு கோரிக்கையும் வைத்ததாம் நடிகர் சங்கம். அது என்ன?

தேர்தல் அறிவிக்கப்பட்டபின், நாடக நடிகர்கள் நடத்தும் நாடகங்களுக்கு தடை விதித்துவிடுகிறதாம் போலீஸ். அப்படி வேலை கிடைக்காமல் ஆறு மாத காலமாவது இவர்கள் அல்லாடுகிற நிலை ஏற்பட்டுவிடுகிறதாம். இந்த முறை அப்படி எந்த தடையும் இல்லாமல் நாடகம் நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். அதற்கு பதிலளித்த முதல்வர், தமிழக அரசு அப்படி எந்த கட்டுப்பாடும் விதிக்கறதில்ல. ஒருவேளை தேர்தல் ஆணையம் அப்படி விதித்திருந்தால், நீங்கள் இதை தேர்தல் நேரத்தில் ஒரு மனுவாக எழுதிக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.

முதல்வரை சந்திக்கிற அந்த நேரத்திலும் நாடக நடிகர்களை பற்றி நினைத்து, அவர்களுக்காக பேசிய இவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவிப்போமே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சென்ட்டிமென்ட்டை நொறுக்கு விஜய் ஆன்ட்டனி செருக்கு!

‘காளி’ என்ற தலைப்பை ரொம்ப காலமாக சுமந்து கொண்டிருக்கிறார் கபாலி ரஞ்சித். ஆனால் “எதுக்குங்க வேண்டாத வேலை? அப்படியெல்லாம் டைட்டில் வச்சா பிரச்சனைதான்” என்று முன்னுதாரணம் காட்டி...

Close