‘குளிக்கிற விஷயத்தில் இவங்க எப்படி?’ நடிகையால் அவஸ்தைப்பட்ட இயக்குனர் நிம்மதி
தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமில்லை. ஆர்வத்தோடு அறிமுகமான அத்தனை பேரும் ஜெயித்தார்களா என்றால், அதுதான் இல்லை. கோடம்பாக்கம் இதில் பல பேருக்கு ‘நோ பார்க்கிங்’ ஏரியாவைதான் ஒதுக்கிக் கொடுத்தது. இருந்தாலும் புதுசு புதுசாக வந்து கொண்டிருப்பவர்களில், இன்று சந்தித்த கஜேஷ், அடக்கமாகவும் அமைதியாகவும், அதே நேரத்தில் தொலை நோக்கு வெற்றிக்கு இப்பவே சீட் பிடிப்பவருமாக இருக்கிறார். நகைச்சுவை கிங் நாகேஷின் பேரன் இவர். அறிமுகமாகும் படத்தின் பெயர் கல்கண்டு!
‘தாத்தா ரொம்ப கண்டிப்பானவர். சமயத்தில் அடிக்கிற அளவுக்கு. அவர் இறக்கும்போது நான் ப்ளஸ்டூ படிச்சுட்டு இருந்தேன். அவருடைய சினிமா அனுபவத்தை பற்றி பேச எனக்கு அருகதையும் இல்ல. வயசும் இல்ல. இப்ப மாஸ்டர் டிகிரி முடிச்சுட்டேன். இந்த நேரத்தில் என்னை சந்தித்து இந்த கதையை சொன்னார் இயக்குனர் நந்தகுமார். அவர் சொல்ல ஆரம்பிச்சதில் இருந்து முடிக்கிற வரைக்கும் ஒரே சிரிப்புதான். நகைச்சுவை என் பிளட்லேயே ஊறியிருக்கு. உடனே நடிக்க சம்மதிச்சுட்டேன் என்றார் கஜேஷ். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் டிம்பிள்.
படத்தின் இயக்குனர் நந்தகுமார், பிரசாந்த் நடித்த ஜாம்பவான், விஜயகாந்த் நடித்த தென்னவன் போன்ற படங்களை இயக்கியவர். ‘இந்த படத்திற்கு நான் ஹீரோ தேடிகிட்டு இருந்தப்பதான் நாகேஷ் சாரின் பேரன் நடிக்க தயாராக இருக்கார். நல்ல கதைக்காக காத்துகிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டேன். என்னுடைய கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்தார் கஜேஷ். முதல் சந்திப்பிலேயே என் கதை அவருக்கு பிடிச்சுருச்சு’ என்றார் நந்தகுமார். இவர் இயக்கிய ‘ஜாம்பவான்’ படத்தில்தான் அப்படத்தின் ஹீரோயின் நிலா, குளிப்பதற்கு மினரல் வாட்டர்தான் வேணும் என்று அடம் பிடித்தார். அது பெரிய செய்தியாக வெளியாகி, நிலாவை அந்த நிலாவுக்கே பேக்கப் செய்துவிட்டது.
இப்போது டிம்பிள்… ‘குளிக்கிற விஷயத்தில் இவங்க எப்படி?’ என்று குத்துமதிப்பாக பிரஸ் கேள்வி கேட்க, அவரும் குத்து மதிப்பாகவே பதில் சொன்னார். ‘அவங்க குளிக்கும்போது நான் பார்க்கலையே’ என்று. தமிழ் தெரியாவிட்டாலும் தன்னை பற்றிதான் என்னவோ பேசிக்கிறாங்க என்பதை யூகித்த டிம்பிள், அருகிலிருந்த கஜேஷிடம், கேட்டு புரிந்து கொண்டார். இந்த படம் வந்த பிறகு தமிழ்சினிமாவில் டாப்போ டாப்புக்கு போக போறாங்க பாருங்க என்று இயக்குனர் கொடுத்த சர்டிபிகேட் வீண் போகாது என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் மினி ஸ்கர்ட்டுடன் வந்தால்தான் மீடியா மொய்க்கும் என்பதை தெரிந்து புரிந்து வைத்திருக்கிறாரே…?