நமீதா வந்தாலும் பிரச்சனை வரலேன்னாலும் பிரச்சனை

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சேலம் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தார் நமீதா. அவரை தொட்டுப்பார்க்கும் ஆசையோடு குவிந்த கூட்டம், அப்படியே ஆர்ப்பரித்து மேடையை நோக்கி முன்னேற, ‘சடபுடா’ சப்தத்துடன் சரிந்தது மேடை. நல்லவேளையாக அங்கு நின்றிருந்த நமீதாவை காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள் விழா குழுவினர். இப்படி சென்ற இடமெல்லாம் பூகம்பம், நின்ற இடமெல்லாம் நில நடுக்கம் என்று புகழோடு விளங்கும் நமீதா, போகாத நிகழ்ச்சி ஒன்றிலும் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறார் என்பதுதான் வியப்பு.

சில தினங்களுக்கு முன் காரைக்காலில் ஒரு நிகழ்ச்சி. பாண்டிச்சேரி பார்டர் என்பதால், சற்றே தள்ளாத்தோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள். நமீதா வருகிறார் என்று கூறி, டிக்கெட்டுகளை தாறுமாறாக விற்று தொலைத்துவிட்டார்கள் விழாக் குழுவினர். ஆனால் திட்டமிட்டபடி நமீதா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இல்லையென்றால் நமீதா வருகிறார் என்று ஏமாற்றி பணம் கறந்தார்களோ? உண்மை என்ன என்பது விழாக் குழுவினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

நிகழ்ச்சி துவங்கி பல மணி நேரம் ஆன பின்பும் நமீதாவை காட்டவில்லை என்று கொதிப்படைத்நது கூட்டம். ‘எங்கே நமீதா, எங்கே நமீதா?’ என்று உணர்ச்சி பெருக்கோடு கோஷமிட்ட அவர்களுக்கு, உருப்படியான பதில் கிடைக்கவேயில்லை. அதற்கப்புறமும் சும்மாயிருக்க அவர்கள் என்ன டிக்கெட் இல்லாமல் உள்ளே வந்த கூட்டமா? அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீச ஆரம்பித்துவிட்டார்களாம். சாலையில் போன பேருந்துகளையும் கல்வீசி தாக்கியிருக்கிறார்கள். இப்படி ஊருக்கு இளைச்சது உள்ளூர் பேருந்துதான் என்ற முடிவில் அவர்கள் செயல்பட, அதற்கப்புறம் வந்த போலீஸ், விழா ஏற்பாட்டாளரை தள்ளிக் கொண்டு போனது.

இந்த தகவல்கள் அனைத்தும் நமீதா காதுகளுக்கு போய் சேர்ந்ததா தெரியாது. ஆனால் ‘ஜனங்க எம்மேல இம்புட்டு ஆசை வச்சுருக்காங்களே, அவங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வது’ என்று நமீதா நினைத்தால் அதன் விளைவுகள் ரொம்ப கோரமாக இருக்கும் என்பதுதான் எதிர்கால சந்ததிக்கு நிகழ்கால நமீதாவின் அதிதீவிர ரசிகர்கள் சொல்ல வரும் சேதி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினியின் லிங்கா சென்ட்டிமென்ட்!

ஈயடிச்சான் காப்பி என்பதை பிலிமடிச்சான் காப்பி என்று மாற்றுகிற அளவுக்கு சென்ட்டிமென்டும், ரிப்பீட்டும் தலை விரித்தாடும் ஏரியா சினிமாவுலகம்தான். போன படத்தில் நெத்தியில விபூதி விட்ருந்தேன். படம்...

Close