விரட்டிய ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்ட நமீதா நாமக்கல்லில் பரபரப்பு!

ரெட்டியப்பட்டி சுவாமிகள் என்றொருவர் இருந்தார். அவரது பக்தர்கள் இப்போதும் ஊர் ஊராக அவரது புகழ் பரப்பி வருகிறார்கள். பக்தி மணம் கமழும் ரெட்டியப்பட்டியில் கால் வைத்தவுடனேயே நாட்டு மக்களுக்கு ஒரு படு பயங்கர ‘வைப்ரஷன்’ ஏற்படுத்திவிட்டார் நமீதா. ரெட்டியப்பட்டிக்கும் நமீதாவுக்கும் ஆன்மீகத்திற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் இறைவனின் திருவிளையாடல் அன்றி வேறென்ன?

நாமக்கல் அருகே இருக்கிறது இந்த ரெட்டியப்பட்டி. (சாமியார் அங்க பொறக்கலப்பா என்கிற வரலாற்று தகவல்களை கூறி யாராவது இந்த செய்தியில் பிளாஸ்திரி ஒட்ட நினைத்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல. இது நமீதா ஹேங் ஓவரில் எழுதப்பட்ட செய்தி) அங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் ஒரு நாடகம் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம். அந்த நாடகத்தை துவங்கி வைக்க சென்னையிலிருந்து கிளம்பி சென்றிருந்தார்கள் நமீதாவும், இயக்குனர் கே.பாக்யராஜும்.

இறைவனின் நாடகத்தில் இதுவும் ஒரு எபிசோட் போலிருக்கிறது. அந்த நாடகத்தை துவங்கி வைக்க வந்திருந்த நமீதாவுக்கு இறைவன் நடத்திய சோதனை நாடகம்தான் இது. அவர் அங்குள்ள மேடையில் ஏறி, ரசிகர்களை பார்த்து ‘ஹே மச்சான்ஸ்…’ என்று அழைத்தபடி பிளையிங் கிஸ் கொடுக்க, ‘நமீதாவுக்கு அரோகரா…’ என்று ஆர்ப்பரித்தபடியே மேடையை நோக்கி ஓடினார்களாம் ரசிகர்கள். ஒரு நமீதா ஏறினாலே உள் மூச்சு வாங்குகிற மேடை அது. இதில் சரக்கடித்திருக்கும் இளசுகளுக்கு மேடையில் ஏழெட்டு நமீதாக்கள் தெரிய, அத்தனை பேரிடமும் தனித்தனியாக ஆட்டோகிராப் வாங்கும் நோக்கத்துடன் மேடைக்கு ஒடினார்கள் குடி மகன்கள். இதில் நல்ல சுத்தமான தேங்காய் எண்ணையில் தலை வாரப்பட்ட டீசண்ட் ஆசாமிகளும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவ்வளவு கூட்டத்தையும் எதிர்பார்க்காத மேடை, பொளக்கென்று மயக்கம் போட்டு குப்புற சாய…. ஒரே குய்யோ முய்யோ!

நல்லவேளையாக நமீதாவை கை தாங்கலாக அழைத்துச் சென்ற கூட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் அருகிலிருக்கும் வீட்டில் அமைதியாக அமர சொல்லிவிட்டார்கள். அதற்குள் நமீதாவுக்கு நல்ல அடி என்று யாரோ ஒரு புண்ணியவான் தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ் என்று ஓசி செல்போனில் ஊரையே கூட்டி விட்டார். நாமக்கல்லில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று ஆம்புலன்ஸ்கள் வந்து சேர, எந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றுவது மூன்று டிரைவர்களுக்கு நடுவில் ஒரே அடிதடியாம்.

நல்லவேளையாக நமீதா அந்த ஆம்புலன்சில் ஏறி செல்கிற அளவுக்கு ஆபத்து இல்லை என்று சமாளித்து அவர்களை அனுப்பி வைத்தார். இத்தனை களேபரங்களிலும் பாக்யராஜை கண்டு கொள்ள ஆளில்லை. அதற்கப்புறம் அதே மேடைக்கு பக்கத்திலேயே அவசரம் அவசரமாக இன்னொரு மேடை போடப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஏற மறுத்துவிட்டாராம் நமீதா. அப்புறம்…?

அப்புறமென்ன? நமீதா துவங்கி வைக்காமலே நாடகத்தை துவங்கினார்கள். நம் வாழ்க்கையில் இப்படியொரு நாடகம் நடந்துருச்சே என்கிற கவலையோடு சென்னைக்கு வண்டியை கிளப்பினார் நமீதா.

அநியாயமா ஏமாந்து போன அந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்!

1 Comment
  1. seelan says

    அநியாயமா ஏமாந்து போன அந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்! super

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லட்சுமிமேனன் கிழவி? விமல் கிண்டல்!

இன்று சென்னையில் நடந்த ‘மஞ்சப்பை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஏன்? லட்சுமிமேனனை கிழவி என்றால் அதிர்ச்சி வராதா என்ன?...

Close