எலும்புகள் ஜாக்கிரதை… மிரட்ட வருகிறார் நமீதா கதி கலங்கப் போகும் சென்னை
இன்னும் சில மாதங்களில் சென்னை நகரம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை காணப் போகிறது. காணக் கிடைக்காத அந்த அரிய நிகழ்ச்சியை மகா ஜனங்களுக்கு வழங்கி மகிழப் போவது கலையுலக வயாக்ரா, நடமாடும் நயாக்ரா நமீதாவேதான். அகில உலக ரசிகர் மன்றத்தை திரட்டி மாநாடு நடத்தப் போகிறாரா? தனிக்கட்சி துவங்கப் போகிறாரா? இப்படி கேள்விகளால் திக்கு முக்காடும் ஜனங்கள் பின் வரும் விஷயத்தை அறிந்தால் ஆச்சர்யத்தின் எல்லைக்கே போய்விடுவீர்கள்.
கடந்த ஓராண்டாக அவர் குத்து சண்டை கற்று வருகிறார். அதுவும் ஏதோ பொழுது போக்குக்காக அல்ல. நிஜமாகவே போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு மெடல் சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு. இதற்காக முறைப்படி குத்து சண்டை பயின்று இந்தியாவுக்காக மெடல் வாங்கிக் கொடுத்த ஒரு குத்து சண்டை வீராங்கனையே தனக்கு கோச்சாக தேர்ந்தெடுத்து அல்லும் பகலும் குத்து சண்டை பயின்று வருகிறார்.
இன்றைய தேதிக்கு நமீதாவை யாராவது தாக்கினால் சம்பந்தப்பட்டவரின் குறுத்தெலும்பை பிரித்து மேய்ந்துவிடுகிற அளவுக்கு இந்த கலையில் விரைவான தேர்ச்சி பெற்றுவிட்டாராம் அவர். இதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமே? அதனால் தன் செலவில் சென்னையில் ஒரு பெரிய குத்து சண்டை போட்டியை நடத்தப் போகிறார். இதில் கலந்து கொண்டூ நமீதாவை வெல்கிறவர்களுக்கு ஏராளமான பரிசுகளும் காத்திருக்கிறதாம்.
யாரங்கே…? குதிரையை அவுத்து மறைவா கட்டு. பகுங்கு குழியில ஃபேன் போட்டு வை!
நமீதா விசயத்தில் நீங்களும், நானும் நித்யாவும்தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ பட புரமோசன் செய்தியில், அப்பப்ப நமீதாவை என் சார்பாக நித்யா மூலம் வம்புக்கிழுத்தது ஆல்வேஸ் ஜாலி ஆரெஸ் அந்தணந்தானே?