இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலைப்பா! மனசார வாழ்த்திய நமீதா

தான் கலந்து கொள்கிற எல்லா திறப்பு விழாக்களையும் ‘சிறப்பு’ விழாக்களாக்கிவிட்டு போவது நல்ல மனசுக்காரி நமீதாவின் வழக்கம்! வெறும் நடிகை என்பதோடு நின்று விடாமல் வர்த்தக துறையிலும் வளமான தொழிலபதிபராகிக் கொண்டிருக்கிறார் அவர்.

வளரும் தொழிலதிபர், கல்வியாளர், கற்பிப்பாளர் என்று பல்வேறு தளங்களில் பறந்து கொண்டிருக்கும் இளைஞரான செல்வகுமார், KSK Technologies என்ற புதிய நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். ஒரு தொழிலதிபரோட மனசு இன்னொரு தொழிலபதிருக்குதான் தெரியும் என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தப்பில்லை! இன்று சென்னையில் துவங்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தை தன் ராசியான கரங்களால் திறந்து வைத்திருக்கிறார் நமீதா.

PHP என்ற தொழில் நுட்பத்தின் மூலம்தான் இன்று பெரும்பாலான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை வடிவமைக்கும் முறை தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அதை கற்றுத்தரவும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் KSK Technologies நிறுவனம், PHP பற்றிய முழு தொழில்நுட்பத்தை கற்றுத்தருகிறது. இந்த படிப்பின் மூலம் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற முடியும். மேலும் சொந்தமாக இணையதளங்களையும் உருவாக்கிக்கொள்ளலாம். அதன் வழிமுறைகளை முழுமையாக சொல்லித்தருகிறது KSK Technologies.

அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். இந்த இணைய தொழில்நுட்ப படிப்புகள் வார நாட்களிலும், வார இறுதியிலும் கற்றுக் கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே இணைய வடிவமைப்புக்கான ஒப்பந்தங்களைப் பெற்று இணையதளத்தை வடிவமைத்தும் வருமானம் ஈட்ட முடியும் என்பது இந்தப் படிப்பின் சிறப்பம்சமாகும்.

இணையதளங்களை உருவாக்கும் முறை பற்றி சொல்லித் தருவதோடு, இணைய தளங்களை உருவாக்கியும் தருகிறோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இணைய தளங்களை உருவாக்கிக்கொடுத்துள்ளோம் என்று கூறுகிற இந்த நிறுவனத்தின் தலைவர் செல்வகுமார், நமீதாவுக்கென தனியாக ஒரு வெப்சைட் துவங்குகிற பணியையும் மேற்கொண்டிருக்கிறார்.

செல்வகுமாரிடம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நமீதா, ‘நீங்க விரைவில் பெரிய தொழிலதிபராக வரணும்’ என்று கூறி வாழ்த்தியதுதான் ஹைலைட்!

வாழ்க… வளர்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்தியை சுற்றும் கட்டுக்கதைகள்!

செப்டம்பர் 18 ந் தேதி சென்னையில் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக் குழுவினர். நடுவில் செப்டம்பர் 15...

Close