இனி சிவி.குமார் படங்களில் நடிப்பதில்லை… – அட்டக்கத்தி நந்திதா அதிரடி முடிவு… ஏன்?
ஒரு தயாரிப்பாளரின் படத்தில் ஒரே நடிகை திரும்ப திரும்ப நடித்தால், நாக்கு மேல பல்ல போடுதோ, இல்ல… சொல்லு மேல கல்ல போடுதோ? விடாமல் கிசுகிசுப்பதுதான் ஊர் வழக்கம். தொடர்ந்து சி.வி.குமார் தயாரிக்கும் படங்களில் நடித்து வந்த அட்டக்கத்தி நந்திதாவையும் அப்படிதான் சேர்த்து சேர்த்து எழுதி, அதையும் நந்திதாவே பார்த்து பார்த்து வயிறெரிய வைத்தது மீடியா. ‘அவங்க சம்பந்தப்பட்ட கதைக்கு பொருத்தமா இருக்காங்க. அதனால் இயக்குனர்கள் அவரை தேர்ந்தெடுக்கிறாங்க. இதுல என் ரோல் எதுவுமில்ல’ என்று பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு ஒதுங்கி வந்தார் குமாரும். இந்த நேரத்தில்தான் இந்த புதிருக்கு ஒரு எதிர்வினை!
இனிமேல் சிவி குமாரின் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் நந்திதா. தனக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றி கூறிய அவர், இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த கம்பெனி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அழகும் கம்மி. அட்ராக்ஷனும் கம்மி. இருந்தாலும் தனது படங்களில் தொடர்ந்து நந்திதாவை நடிக்க வைத்து வாழ்வளித்த குமாருக்கு, இப்படியொரு முடிவு தேவையா என்பது இருக்கட்டும்… ஏறிவந்த ஏணியை படியோடு உதைக்கிற பக்குவம் இதுபோன்ற நடிகைகளுக்கு ஏன் வருகிறது, எதற்காக என்பதும் புரியாத புதிர்தான்!
-‘கன்’ செய்திகளுக்காக கும்மிடிப்பூண்டியிலிருந்து ‘நியூஸ்’ ராமன்