இங்கேன்னா ரெண்டு அங்கேன்னா ஐம்பது! இருந்தாலும் நயன்தாரா ஓ.கே!
எப்பவுமே சொந்த ஊர் சோன் பப்டிக்கு ருசி அதிகம் என்பதை நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ்சினிமாவில் நயன்தாராவுக்கு இருக்கிற மாஸ், வேறெந்த ஹீரோயின்களுக்கும் இல்லை. மார்க்கெட் விஷயத்தில் அவர் ஒரு பொம்பள ரஜினி. இப்பவும் யார் கால்ஷீட் கேட்டாலும் ரெண்டு விரலை காட்டி, கோடியில் சம்பளம் கேட்கிற தில் அவருக்கு இருக்கிறது. கடைசியாய் அவர் நடித்துக் கொண்டிருக்கும் இது நம்ம ஆளு படத்திற்கும், நானும் ரவுடிதான் படத்திற்கும் அவர் பேசிய சம்பளம் இரண்டு கோடிதான். போனசாக அவருக்கு விக்னேஷ் சிவனும் கிடைத்தார். அது தனி…
இந்த நிலையில்தான் தனது சொந்த மொழியான மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். மம்முட்டிதான் ஹீரோ. இந்த படத்திற்கு அவருக்கு அவர்கள் பேசிய சம்பளம் வெறும் ஐம்பது லட்சம். தமிழுக்கும் மலையாளத்திற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் இருக்கலாம். இப்படி ஒன்றரை கோடி வித்தியாசம் இருந்தால் எப்படி?
எங்க ஊர் ஸ்டைல் இதுதான். ஆனாலும் நான் அதை ரசிக்கிறேன். மதிக்கிறேன் என்று ஃபீலிங்ஸ் காட்டுகிறார் நயன்.
அதென்னவோ தெரியல… பக்கத்து வீட்டு முருங்கக்காய்னா, பலே ருசிதான் எல்லாருக்கும்!
போடி போக்கத்தவளே… அப்பா தமிழன்கள் எல்லாம் இளிச்ச வாயனுங்களா என்ன… நீ ஒவ்வொருத்தனையும் இப்பிடியே ஏமாத்திகிட்டு இருக்க.. கடைசியில தெருவுலதான் நிக்கப்போற…
முதல்ல இவனுங்கள சொல்லணும்… இப்பவும் போய் நிக்கிறாங்களே உன் முன்னாடி கால்சீட்டுக்காக…