கிளி பறந்து போயிருச்சு? ஜிவி.பிரகாஷை தவிக்க விட்ட நயன்தாரா!

இனிப்பான வெல்லக்கட்டிய இத்துப் போன சாக்கு பையில கொட்டிடுவாங்களோ? என்கிற அளவுக்கு அந்த செய்தியை கேட்டு கிறுகிறுத்துப் போயிருந்த அத்தனை மனசுக்கும் ஆயுட்கால நிம்மதி… ஜி.வி.பிரகாஷுடன் ஜோடியாக நடிப்பதாக முதலில் சம்மதம் தெரிவித்த நயன்தாரா, ஒரேயடியாக ஓடிப் போய்விட்டார். இதனால் ஜிவி படுபயங்கர அப்செட்! ஏனிந்த இடர்பாடு?

வேறொன்றுமில்லை. கலங்கரை விளக்கத்துல ஏறி பல்ப் துடைக்க ஆசைப்பட்டது கூட தப்பில்லை. ஆனால் அது அதற்கென்று ஒரு வேல்யூ இருக்கிறதல்லவா? இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டாராம் ஜி.வி. அதனால் சம்பளம் பேசுகிற பொறுப்பும் அவருக்கே தரப்பட்டிருந்தது. மிக மிக சந்தோஷமாக பேச ஆரம்பித்தார் அவரும். முதலில் இப்படி இப்படி… என்று ஆரம்பித்தவர், எனக்கு ஜோடியா நீங்க நடிக்கணும் என்று கேட்டு, அதற்கு அவரை சம்மதிக்க வைத்த வரைக்கும் ஜிவியின் மண்டை பிரமாதமாக வேலை செய்தது. ஆனால் அதற்கப்புறம் சம்பளம் பேச ஆரம்பித்ததுதான் சங்கடம்.

‘வழக்கமா ரெண்டு கோடி வாங்குறேன். நீங்கன்னா ரெண்டரை கோடி கொடுத்துருங்க’ என்றாராம் நயன்தாரா. அங்குதான் ஆஃப் ஆகிவிட்டது அத்தனையும். திடுக்கிட்டு போன ஜி.வி. ‘எங்க பட்ஜெட்ல அவ்வளவு தொகை ஒதுக்கலையே?’ என்றாராம். ‘அப்புறம் ஏன் என்னை ‘ஒதுக்கணும்’னு நினைக்கிறீங்க? ஆளை விடுங்க’ என்று கூறிவிட்டு நாட் ரீச்சபுள் ஆகிவிட்டார் நயன்தாரா.

Read previous post:
சினிமா ஹீரோவான கம்யூனிஸ்ட் தலைவரின் மகன்! சீமானுக்கும் முக்கிய ரோல்!

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ்...

Close