50 லட்சம் கூட வேணாம் ஆளை விடுங்க சாமீய்… நயன்தாரா ஓட்டம்!

“நீ வரும்போது நான் வர மாட்டேன். ஆனால் நான் கூப்பிடும்போது நீ வரணும்” என்கிற மென்ட்டாலிடி, எந்த வகையில் பார்த்தாலும் அட்ராசிட்டியில்லாமல் வேறென்னவாம்? அப்படியொரு சிட்டியில் சிக்கிக்கொண்டுதான் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இது எந்த படத்தை பற்றிய தகவல் என்பதை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தால், சின்னக்கவுண்டர் படத்தில் வரும் செந்திலை விடவும் மோசமான நிலைக்கு சித்தரிக்கப்படுவோம் என்பதால், கோ அஹெட்…

நயன்தாராவை என்கொயரி செய்தது நடிகர் சங்கம். அப்போது சரத்குமாரிடம் பேசிய நயன்தாரா, “அந்த படத்திற்காக பத்து தடவை கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்துருக்கேன். ஒவ்வொரு முறையும் அவர் வராததால் கேன்சல் ஆகியிருக்கு. இப்போ நான் ஆயிரம் கமிட்மென்ட்ல இருக்கேன். கூப்பிடும்போதெல்லாம் என்னால வர முடியாது. அதுமட்டுமில்ல. இந்த படத்தில் நான் நடிக்க ஒத்துகிட்டது சிம்புவுக்காக இல்ல. பாண்டிராஜுக்காக. அவரே இவர்கள் எடுக்கப் போவதாக சொல்லும் அந்த பாடல் காட்சி தேவையில்லைன்னு சொல்றார். கல்யாணத்துக்கு பிறகு வரும் டூயட் பாடலைதான் யாராவது ரசிப்பாங்களா? இவங்க கேட்கறதும் அந்த மாதிரி ஒரு பாடல் காட்சியை எடுக்கறதுக்காகதான்”.

“நான் என்னோட சம்பள பாக்கியான 50 லட்சத்துக்காக சண்டை போடல. அந்த பணமே எனக்கு வேணாம். ஆளை விட்டா போதும். ப்ளீஸ்” என்றாராம். நயன்தாராவின் இந்த சூடான பதிலை கேட்டு இன்னும் சூடாகியிருக்கிறது சிம்பு வட்டாரம்.

இந்த பட விவகாரம் தொடர்பாக ஓப்பன் பேட்டியளிக்க தயாராகி வருகிறார் டைரக்டர் பாண்டிராஜ். அவர் சப்போர்ட் நயன்தாராவுக்குதான் என்கிறது மேலதிக தகவல்கள்!

Read previous post:
தாஜ்மஹாலுக்கு போகிறார் விஜய்!

தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி உண்டா? இல்லையா? என்கிற டென்ஷன் எல்லாம் நடிகர்களுக்கு தேவையில்லை. அது தயாரிப்பு நிர்வாகிகளின் டென்ஷன்! அப்படியொரு டென்ஷனை தூக்கி அட்லீ தலையில்...

Close