நயன்தாரா மேல அம்புட்டு கோவம்? ஹ்ம்ம்!

திமுக ஆட்சியிலிருந்த காலத்திலும் சரி, அதிமுக ஆட்சியிலிருக்கும் காலத்திலும் சரி, கலைஞரின் பேரனான உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ் நிறுவனம் கொடி கட்டி பறந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம், அவர்கள் நம்பியிருப்பது கட்சி பலத்தையல்ல, கதை பலத்தையும் விளம்பர பலத்தையும்! இவ்விரு ஆட்சி காலத்திலும் வெற்றி பெருகிற அந்த நிறுவனத்தின் படங்களே அதற்கு சாட்சி. இருந்தாலும்…?
இருந்தாலும்னு இழுத்தா அதுக்கு என்ன அர்த்தம்? ஆணானப்பட்ட அவங்களுக்கே நடிகைகள் பெப்பே காட்டுகிறார்களே, அதை நினைத்துதான் இந்த இழுப்பு.
தற்போது நயன்தாராவுடன் ‘நண்பேன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்த படத்தை வழக்கம் போல அவரது ரெட் ஜயன்ட் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகையாகவே தோன்றி நடிக்க வேண்டி சில நடிகைகளை அழைத்தாராம் இயக்குனர். ஹன்சிகாவை அழைத்தபோது, படத்தின் நாயகியான நயன்தாராவை மனதில் வைத்துக் கொண்டு என்னிடம் தேதிகள் ஃபிரியா இல்லே. ஸாரி என்று கூறிவிட்டாராம். கமல் மகள் ஸ்ருதிஹாசனும் அதே பதிலை சொல்லிவிட, கடைசியாக தமன்னாவை கேட்டார்களாம்.
அல்வா தின்ன பூனை ஆரஞ்சு மிட்டாய்கெல்லாமா மயங்கும்? ட்வென்ட்டி ஃபைவ் லேக்ஸ் தர்றீங்களா என்றாராம். யோசித்துக் கொண்டிருக்கிறது நிறுவனம்.
ஆனால் முன்னணி நடிகைகள் மறுப்பது நயன்தாராவின் மீதிருக்கும் பொறாமையால்தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். பார்க்கறதுக்கு கொடி மாதிரியிருந்தாலும், படக்குன்னு முடிவெடுக்கிறதுல வெடியா இருக்குதுங்களேப்பா….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபுவுடன் இணைகிறார் குஷ்பு தமிழ்சினிமாவில் திடீர் திருப்பம்!

கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கிற ஆசையை முழுவதுமாகவே விட்டொழித்திருந்தார் குஷ்பு. அவரது ஒரே ஆசை கழகத்திற்கு வலு சேர்த்து அதை கான்கிரீட் பில்டிங் ஆக்குவதாகதான் இருந்தது....

Close