முதல்வர் கையில்தான் கொடுப்பேன்! நயன்தாரா பிடிவாதம்?

யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள் நடிகைகள். என்னய்யா இது? ரஜினி பத்து லட்சம், நம்ம ஹன்சிகா 15 லட்சமா? என்று ரசிகர்களே வியக்கிறார்கள். ஹன்சிகா கொடுத்த செய்தியின் ஈரம் காய்வதற்குள் ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார். எல்லாம் வெள்ள நிவாரண நிதி. மேற்படி செக்குகள் நடிகர் சங்க நிர்வாகிகள் வசம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில், அடிப்படையிலேயே இரக்க குணமும், ஈகை குணமும் மிக்க நயன்தாரா எங்கே என்று மனசு தேடுமல்லவா? அப்படிதான் தேடுகிறது சினிமா டெக்னீஷியன்களின் கண்கள். சக தொழிலாளிக்கு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவி செய்யும் குணமுடைய நயன்தாரா எதையும் விளம்பரமாக்கிக் கொண்டதில்லை. கடந்த முறை சுனாமி வந்து மக்கள் கடும் உயிர் பலியை சந்தித்தபோது நயன்தாராதான் சினிமாவுலகத்திலிருந்து முதல் நிதியை வழங்கினார். அப்போதே பத்து லட்சம்!

அப்படிப்பட்ட நயன்தாரா எங்கு போனார்? ஏன் இன்னும் நிதியளிக்கவில்லை? நிச்சயம் அது நிறைவான தொகையாகதான் இருக்கும் என்றெல்லாம் சினிமாவுலகம் எதிர்பார்த்து காத்திருக்க, நம் காதுக்கு வந்த செய்தி… அட! அட!!

இந்த தடவையும் நிதியை நேரடியாக முதல்வரை சந்தித்துதான் கொடுக்க வேண்டும் என்கிற திட்டத்திலிருக்கிறாராம் நயன்தாரா. அதனால்தான் அந்த நல்ல செய்தி வர தாமதம் ஆகிறது என்கிறார்கள். மனசு சொல்லும்போதே மணி பர்சை திறந்துடுங்க நயன்தாரா! நாள் போக போக, சுருக்குப்பை இறுக்கமாகிடும் என்பதுதான் மனுஷ மனசின் மகத்துவம்!

2 Comments
  1. Siva says

    கடந்த ஒரு வார காலமாக ரஜினி என்ன செய்தார் என்றே கேள்வி கேட்கிறீர்களே ? ரஜினியை தாண்டி அப்படியே விசை, அசித்து , சொம்பு போன்ற மகா நடிகர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டியது தானே !!!
    வாழ்க பத்திரிகை தர்மம்

  2. ஆரோக்கியராஜ் says

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்மன்றங்கள் மூலமாக உணவு, துணிமணிகள், போர்வை, மருந்து மாத்திரைகள், பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரண உதவிப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து உள்ளார். இது ஆதரபூர்வமான உண்மை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா… கொஞ்சம் ஸ்டாப்யா! இது பாலா கட்டளை!

செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில்...

Close