நயன்தாராவும் அதர்வாவும் ட்வின்ஸ்! இமைக்கா நொடிகள் சீக்ரெட்!
கைக்கு எட்டுனது பைக்கு எட்டலையே? என்று அதர்வா வேண்டுமானால் மனசுக்குள் கவலைப்பட்டிருக்கலாம். பிறகு என்னவாம்? நயன்தாராவுடன் ஒன்றாக நடித்து வந்தாலும், அவருக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்… ஐயோ பாவம். அவருக்கும் எழும் அல்லவா? (இவர் வயசுதான் சிம்புவுக்கும். மனுஷன் என்னமா விளையாண்டாரு?)
‘டிமாண்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிக் கொண்டிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் இணைகிறார்கள் என்றதுமே, ஆஹா… ஜோடியாகதான் என்று ஊர் உலகம் திரி கொளுத்தியது. ஆனால் நிஜமே வேறு. இருவரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பிறந்த ட்வின்ஸ் ஆக நடிக்கிறார்களாம்.
என்னதான் பெரிய ஹீரோவின் பிள்ளையாக இருந்தாலும், படப்பிடிப்பில் நயன்தாராவின் நடிப்பை கண்டு அசந்து போய் நின்ற அனுபவம் நிறையவே ஏற்பட்டிருக்கிறது அதர்வாவுக்கு. அதையெல்லாம் தம்பிக்கும் கற்றுக் கொடுத்திருப்பாரே நயன்தாரா?
To listen Audio Click below:-
https://youtu.be/tibu4p4LXk4