வருங்கால மாமியாருடன் நயன்தாரா வாய் தகராறு! ஏன்? எதற்கு?

தமிழ்சினிமாவின் அறம், நல்ல படங்களை ஓட வைப்பதுதான்! அந்த வகையில் அறம், நாடெங்கிலும் பேசப்பட்ட படம் மட்டுமல்ல… கையை கடிக்காத படமும் கூட! அந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கிற அதே நேரத்தில், விரைவில் வரப்போகும் வேலைக்காரன் நயன்தாராவுக்கு இன்னொரு புத்துணர்ச்சியை அளிப்பது நிச்சயம். இந்த நல்ல நேரத்தில்தான் அவரது வாயை பிடுங்கி, வம்பை விதைத்திருக்கிறார் அவரது வருங்கால மாமியார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரே வீட்டில்தான் குடியிருக்கிறார்கள் என்பது இன்டஸ்ட்ரி அறிந்த ரகசியம்தான். இப்போது அதே வீட்டுக்கு வந்திருக்கிறார் விக்னேஷ்சிவனின் அம்மா. கிட்டதட்ட கூட்டு குடித்தனம் போலதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். மாமியார் வீட்டுக்குள் வந்தாலே மருமகள்களின் சந்தோஷம் பறி போவது இயற்கைதானே?

அப்படிதான் இங்கும் நடந்ததாம். எப்படி?

நயன்தாராவுக்கு ஒரு நல்லப்பழக்கம் உண்டு. காரில் செல்லும்போது தனது காலுக்குக் கீழே விலை உயர்ந்த டவல் ஒன்றை போட்டுக் கொள்வார். ஆனால் அதில் கால் படாது. அவரது செருப்புக்குதான் இந்த மெத்து மெத்து ஒத்தடம். காலை வைத்துக் கொண்டால் கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கு. செருப்புக்கு எதுக்கு என்று நினைத்த மாமியார் அந்த மிருதுவான டவல்களை எடுத்து வீட்டுக்குள் வைத்துவிட்டாராம். ஒரு நாளல்ல… இரு நாளல்ல… தினந்தோறும் இப்படி நடக்க… கடும் கோபத்திற்கு ஆளான நயன்தாரா லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம் மாமியாரை.

மேற்படி ஏரியாவில் மெதுவான இடி சப்தம்! குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்ப்பா…!

https://www.youtube.com/watch?v=468W-nCWEGU

2 Comments
  1. sandy says

    தியாக செம்மல்கள் எதையும் பொறுத்துக்கொண்டு தான் வாழ வேண்டும்.

  2. Sunder says

    புரோக்கர்ரம்மானா பொறுத்துதான் போவேனும், இந்த அடிப்படை அறிவு கூட இல்லைன்னா பொன் முட்டையிடும் பறவை சரக்குன்னு பறந்துரும்மா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொடிவீரன் -விமர்சனம்

ஏழு தலைமுறைக்கு முன்னால் வந்திருந்தால் கூட, ‘எதுக்குப்பா இவ்ளோ பழசு?’ என்று கேட்கிறளவுக்கு அரத பழசான கதை. அதை அரிவாளால் கொத்தி, ரத்தத்தால் பக்தி பண்ணியிருக்கிறார் ‘சாதி...

Close