ஒரு வழியாக ரஜினியையும் வளைத்தார் நயன்தாரா
தொடர் மனக் காயங்களுக்கு பிறகும் அசராமல் நின்று அடிக்கிறார் என்பதால் அவர் லயன் லேடியோ, அயன் லேடியோ, தமிழ்சினிமாவின் டாப் லேடி என்றால் தற்போதைய நிலவரப்படி அது நயன்தாராதான். அண்மையில் இவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் இந்தி படம் ஒன்றுக்கு மூன்று கோடி சம்பளம் வாங்கவிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் இங்கே. இந்தியில் நடிக்க விருப்பம் இல்லாத நயன், சம்பளத்தை தாறுமாறா கேட்டா ஓடிடுவாங்க என்று நினைத்து கேட்ட சம்பளம்தானாம் அது. அதற்கும் சரி என்று சொல்லி ‘எப்ப அட்வான்ஸ் தர?’ என்று துரத்திக் கொண்டிருக்கிறார்களாம் அவரை.
இப்படி பேங்க் கல்லாபெட்டியையே மார்க்கெட்டாக கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு அடுத்த அழைப்பு எங்கிருந்து தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து. சந்திரமுகி படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். ஆனால் ரஜினிக்கு ஜோடியாக அல்ல. அந்த படத்தின் வெற்றிதான் ரஜினியின் ரீ என்ட்ரி. அந்த சென்ட்டிமென்ட் உந்தி தள்ள, நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தாராம் ரஜினி. லிங்கா படத்திற்காகதான் இந்த அழைப்பு. படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என்று இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் மூன்றாவதாக அவர் நயன்தாராவை அழைத்தது வேறு எதற்காக இருந்துவிடப் போகிறது? போகட்டும்… நாம் சொல்ல வருவது சம்பள விஷயத்தையோ, ரஜினி அழைப்பையோ அல்ல.
இந்த படத்தில் அவர் ரஜினியோடு சேர்ந்து நடிக்கப் போவதில்லை. மாறாக ஒரு பாடலுக்கு ஆடப் போகிறாராம். இந்த ஆட்டத்தில் ரஜினியும் இருப்பார். அவ்வளவே…
நயன்தாராவை இன்னும் எத்தனை வருடங்களுக்கு கொண்டாட போகிறதோ தமிழ்சினிமா?