அந்தாளு இருக்கிற ஏரியாவுக்கே வரமாட்டேன்! நயன்தாரா எரிச்சல்

கண்ணில் படுற முக்கிய இடத்தில் உன்னை எடுத்து வச்சுக்குறேன் என்று சொல்லாமல் சொல்லி, பிரபுதேவா பெயரில் வரும் P என்ற முதலெழுத்தை தன் கையில் பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு பச்சை தண்ணியாக இருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் கொதிக்கிற வென்னீராகிறார் அந்த பெயரை கேட்டாலே! தப்பி தவறி டி.வி பார்க்கிற நேரத்தில் கூட பிரபுதேவா பாடல் வந்தால், பொசுக்கென மாற்றிவிடுவாராம். அந்தளவுக்கு ரப்பர் மனுஷனை பெப்பர் பாயாவாக்கிக் கொண்டிருக்கிறார் நயன்.

இந்த நேரத்தில்தான் ஒரே நேரத்தில் இரண்டு இந்தி படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ‘எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம். உங்க கால்ஷீட் இருந்தா போதும்’ என்று வடக்கிலிருந்து வந்தார்கள் இரு தயாரிப்பாளர்கள். அவர்களிடம் அவர் சொன்ன வார்த்தைதான் இந்த செய்தியின் தலைப்பு.

‘எனக்கும் இந்தியில் நடிக்கணும்னு ஆசை இருக்கதான் செஞ்சுது. ஆனால் இப்போது அவர் அங்கு பிரபலமா இருக்கார். இந்த நேரத்தில் நான் அங்கு வந்தால், தேவையில்லாமல் அவரையும் என்னையும் இணைச்சு எழுதுவாங்க. பழசையெல்லாம் கிளறுவாங்க. இப்பதான் நிம்மதியா இருக்கேன். எதிர்காலத்தில் அந்தாளு குறுக்கும் நெடுக்கும் போறதை கூட நான் பார்த்துடக் கூடாது. அதனால் ப்ளீஸ். என்னை விட்ருங்க’ என்றாராம் வெளிப்படையாக.

இவ்வளவு வெளிப்படையாக அவர் சொன்ன பிறகும், ‘வாங்க வாங்க ’ என்று வற்புறுத்த அவர்கள் ஒன்றும் பொல்லாதவர்கள் இல்லையே? காலம் கனியும்போது கட்டாயம் வரணும் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்களாம்.

காலம் கனியனும்னா பிரபுதேவா மார்க்கெட், வடிவேலு மாதிரி மார்க்கெட் மாதிரி ஒரேயடியா சாயணும். அது எப்போ சாஞ்சு… இவர் எப்போ இந்திக்கு போறது?

Read previous post:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி விஜய் பரபரப்பு அறிக்கை!

நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை...

Close