நயன்தாரா நாடகம்! பித்துப் பிடித்தலையும் மீடியாக்கள்

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற சந்தோஷத்திலிருக்கிறார் நயன்தாரா! கடந்த ஒரு மாதகாலமாகவே அவ்வப்போது அவரது புதிய காதல் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்குமாக சுற்றி சுற்றி வந்த மீடியா, நேற்று அதை தனது முழு நேர பணியாகவே எடுத்துக் கொண்டது. நயன்தாராவுக்கும் ‘நானும் ரவுடிதான்’ பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் என்று வெளியான வதந்திக்கு மாறி மாறி ஆதாரம் சேர்ப்பதற்காக அலைந்தார்கள்! வழக்கம் போல அத்தனை பேருக்கும், ‘பொங்க சோறு’ அனுப்பி வைத்தார் நயன்.

யாரையாவது வெறுப்பேற்றுவதற்காக யாருடனாவது சுற்றுவது, அப்புறம் கல்யாணம் வரைக்கும் போய், கடைசி நேரத்தில் ‘வேண்டாம் புடிக்கல…’ என்பதெல்லாம் சினிமாக்காரர்கள் மத்தியில் மட்டுமே நடைபெறுகிற காமெடி. அந்த வழக்கத்தின் இன்னொரு ஐட்டம்தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் என்று வர்ணிக்கிறது கோடம்பாக்கம். தன்னை பற்றி எந்நேரமும் செய்திகள் வந்து கொண்டேயிருக்க வேண்டும். ஆனால் நாம் யாரையும் சந்தித்து முணுக் என்று கூட பேசிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் விஷயத்தில் கூட சிம்புவை பழிவாங்கும் எண்ணத்தோடுதான் நடந்து கொள்கிறாராம். சிம்புவை பழிவாங்கியதுமாச்சு. மீடியாவுக்குள் சுற்றி வந்த மாதிரியும் ஆச்சு.

இந்த விக்னேஷ் சிவனும் சிம்புவும் ஒரு காலத்தில் குளோஸ் பிரண்ட்ஸ். நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் லவ் தறிகெட்டு தலைக்கேறிய போதெல்லாம், இஞ்ச் பை இஞ்ச் அந்த சம்பவங்களை கேட்டு இன்புற்றவர் இந்த விக்னேஷ்சிவன். அதனால்தானோ என்னவோ இவருடன் சுற்றுகிறார் நயன்தாரா. இருந்தாலும் இது கல்யாணம் வரைக்கும் போகாது என்று அடித்துச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இன்னும் நாலைந்து படங்கள் அவர் தெலுங்கில் நடிக்கப் போகிறார். தமிழில் ஒரு இடைவெளி வருமல்லவா? அதை நிரப்பதான் இந்த விக்னேஷ் சிவன் காதல்.

நயன்தாரா திரும்பி வந்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் வரை இந்த காதல் அவரை தமிழ் பத்திரிகைகளில் என்கேஜ்ட் ஆக வைத்திருக்கும்!

ஒரு ரகசியம்- தமிழ்சினிமா நடிகைகளிலேயே அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசுகிறவர் என்கிற பெருமை நயன்தாராவுக்குதான் உண்டு என்கிறார்கள் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவர்கள். நேற்றெல்லாம் அவர் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளை கோர்த்து எடுத்திருந்தால், அது சரோஜாதேவி புத்தகங்களையெல்லாம் மிஞ்சியிருக்குமாம்! யாராவது பதிவு பண்ணியிருந்தா எடுத்து விடுங்கப்பா….!

Read previous post:
அந்த பிளாஷ்பேக்கை இப்போ நினைச்சாலும்… ஸ்ட்ரெயிட்டா ஒரு அஜீத் புராணம்!

‘என்னவோ தெரியலைப்பா... அவரு இப்பல்லாம் அப்படிதான் நடந்துக்குறாரு’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்! அதுவும் நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக. ‘காதல்...

Close