முதல்ல லைட்டை நிறுத்துங்க… நயன்தாராவின் இன்வால்வ்மென்ட்!
சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே? என்று சக ஹீரோக்கள் விக்னேஷ் சிவனின் காதல் குறித்து கடுப்படித்தாலும், சிவதாண்டவத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் அவர். யெஸ்… நானும் ரவுடிதான் தியேட்டர்களில் கோலாகல ஹிட்டாகிவிட்டது. ஒரு தேர்ந்த சமையல்காரரின் கைப்பக்குவத்துடன் உருவாகியிருக்கிறது படம். சிரிப்பு, சென்ட்டிமென்ட், ஆக்ஷன், பரபரப்பு, காதல், என்று சுற்றி சுற்றி பிரமிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ்.
ஆச்சர்யம் நம்பர் ஒன்று, இந்த படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, ‘மொழி’ ஜோதிகாவுக்கு நிகராக பேசப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஆச்சர்யம் நம்பர் ரெண்டு…. அவரே இந்த படத்திற்காக டப்பிங் பேசியிருக்கிறார். அதுவும் முதல் முறையாக.
நயன்தாரா டப்பிங் பேசிய அனுபவம் எப்படியிருந்தது? விக்னேஷ் சிவனிடம் கேட்டால், அதையே ஒரு புராணக்கதை போல விவரிக்கிறார். மலையாளத்தில் ஏதோவொரு படத்தில் பேசியிருக்கிறார். அவ்வளவுதாங்க நயன்தாராவோட டப்பிங் அனுபவம். இந்த படத்திற்காக நானே பேசுறேன் என்று கூறி விட்டாலும், தியேட்டருக்கு வந்ததும் கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிட்டார்.
நான் ரெகுலர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஸ்கீரின்ல ஓடுறதை பார்த்து அப்படியே பேசிட முடியாது. அதே மாதிரி நடிக்கணும். அப்பதான் முடியும். ஸ்கிரீன்ல அழுதா, நானும் இங்க அழணும். அதனால் கிளிசரின் கொடுங்க என்று வாங்கிக் கொண்டார். டப்பிங் தியேட்டரில் எரிந்த லைட்டையும் நிறுத்த சொல்லிட்டார். அப்படியே மறுபடியும் நடிச்சு நடிச்சு பேசுனதுதான் அந்த டப்பிங் என்றார் விக்னேஷ் சிவன்.
படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும் நயன்தாராவின் அர்ப்பணிப்பு.
யாருக்கு பாராட்டு? பேச வச்ச விக்னேஷ் சிவனுக்கா? பேசிய நயன்தாராவுக்கா?
நானும் ரவுடி தான் படம் அருமையாக உள்ளது. நேரம் போவதே தெரியவில்லை. வசூலிலும் நானும் ரவுடி தான் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.