நயன்தாரா பார்வைக்கே போன நயன்தாரா வீடியோ! அப்புறம் என்னாச்சு?

ஓபாமாகவே இருந்தால் கூட, ‘உட்காரு மச்சி கொஞ்ச நேரம்…’ என்றழைத்து ஒரு கிண்டல் வீடியோவை காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது வாட்ஸ் ஆப் அரக்கர்கள். தமிழக தலைவர்களில் ஆரம்பித்து, சாதா நடிகர்கள் வரைக்கும் கூட இவர்களின் கிண்டல் கேலியிலிருந்து தப்பிக்க முடியாத நிலைமை. அதிலும் இவர்களின் கேலிக்கு ஆளாகி போலீஸ் கம்ளைன்ட் வரைக்கும் போனவர் விஜயகாந்த். அப்படியும் சமாளிக்க முடியலையே! நெக்ஸ்ட்? சமீபத்தில் இவர்களின் ஓவர் அட்ராசிடிக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவரும் கட்டிப்பிடித்தபடி இருக்கும் ஸ்டில் ஒன்று எந்த நேரத்தில் வெளியானதோ, அடுத்த செகன்டிலிருந்தே வறுத்தெடுக்கப்படுகிற நபர் நயன்தாராதான்.

இவருடன் யாரெல்லாம் கிசுகிசுக்கப்பட்டார்களோ… அவர்களும் நயன்தாராவும் இருப்பது போன்ற வீடியோ க்ளிப்பிங்ஸ்களை தேடி கண்டு பிடித்து, அதற்கு பொறுத்தமாக வடிவேலு வாய்ஸ்சை மிக்ஸ் பண்ணி ஒரு வீடியோ வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இவருக்கு தெரிஞ்சே அவர். அவருக்கே தெரிஞ்சே இவர். இவங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சே மூணாவது… நாலாவது… என்று நயன்தாராவின் காதல்களும் விளக்கங்களும் தொடர்வது போல அமைக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை பார்க்கிற எவரும் கொல்லென்று சிரிக்காமல் நகரவே முடியாது.

அதைதான் யாரோ ஒரு விஐபி நயன்தாராவின் தனிப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் ஒரு இயக்குனர்தான் என்கிறது கோடம்பாக்க தகவல்கள். முதலில் என்னவோ என்று பார்க்க ஆரம்பித்த நயன்தாரா அந்த வீடியோ முடியும்போது கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வைத்திருந்தாராம். அட… சோகத்தில் இல்ல பாஸ். சிரிச்சு சிரிச்சு தாங்க முடியாமல் வெளிவந்த கண்ணீர் அது. ‘செம்மையா பண்ணியிருக்காங்க. நிஜமாகவே ரொம்ப ரசிச்சேன். தேங்க்ஸ்… ’ என்று அந்த வீடியோவை அனுப்பி வைத்த அந்த விஐபிக்கு நன்றி சொல்லி மெசேஜை தட்டி விட்டாராம்.

அதாண்டா எங்க தலைவி!

1 Comment
  1. Nanban says

    Boss, Video Link Please

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எம்.ஜி.ஆர் வீட்டில் சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்....

Close