நயன்தாரா- டைரக்டர் காதல்! உறுதிபடுத்திய ஆர்யா?

நயன்தாராவுக்கு இது எத்தனையாவது காதலோ, தெரியாது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் யாரையாவது காதலிக்கும் போதெல்லாம், அதை ஏதோ தேசத்திற்காகவே செய்யப்பட்ட மெகா சைஸ் பூங்கொத்தாக எண்ணி பிரஸ்தாபிக்க ஆரம்பித்துவிடுகிறது மக்கள் மனசு. நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் லேட்டஸ்ட் பூச்சரம் தொடுக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ஒருவேளை நெசமா இருக்குமோ, இல்ல… வழக்கம் போல நயன்தாராவின் லவ் ஸ்டன்ட்தானோ? என்றெல்லாம் அதே ஜனங்கள் குழம்பித் தவிக்க, நயன்தாராவின் நெருக்கமான வட்டத்திற்குள்ளிருக்கும் ஆர்யா அந்த ரகசியத்தை போட்டு உடைத்தார் நேற்று.

“எந்த நடிகையிடம் போய் ‘யாரோட நடிக்கணும்னு ஆசை?’ என்று கேள்வி கேட்டாலும், ஆர்யாவின் பெயரை மறக்காம சொல்றாங்க. அப்படியென்ன வித்தை இருக்கு உங்ககிட்ட?” இப்படியொரு கேள்வியை ஆர்யாவை நோக்கி தொடுத்தது நிருபர் குழு. சற்றே வெட்கத்துடன் சிரித்துக் கொண்ட ஆர்யா, “அதெல்லாம் முன்னதான் சார். இப்பல்லாம் நடிகைகங்க மனசு ஹீரோக்களை தேடுறதை விட டைரக்டர்களைதான் தேடுது’’ என்றார் லேசாக தொட்டும் தொடாமலும். “நயன்தாராவை சொல்றீங்களோ, அவங்களோட புது லவ்வுக்கு வாழ்த்து சொன்னீங்களா?” என்று மடக்கிய பிரஸ்சிடம், சற்றே மழுப்பலாகவும், அதே நேரத்தில் நீங்க கேள்விப்பட்டது உண்மைதான் என்பது மாதிரியும் ஒரு பதிலை சொன்னார்.

“இன்னும் வாழ்த்து சொல்லல…” நறுக்கென்று ஒரு பதிலை சொல்லிவிட்டு அதற்கப்புறம் என்னவோ சொல்ல வாயெடுத்தவர், “வேண்டாம்… இந்த கேள்வியை இப்படியே விட்டுடலாம்” என்றார்.

ஐயய்யே… கிளி பறந்துருச்சா?

Read previous post:
sakalakala vallavan song stills

Close