ஜென்மத்துக்கும் அவருடன் நடிக்க மாட்டேன்! நயன்தாரா பதிலால் சோகமான ஹீரோ?
‘நான் பொம்பள ரஜினிடா’ என்கிற அளவுக்கு எந்த விஷயத்தை கொளுத்திப் போட்டாலும், சூடாக வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்காகவே அவரை சுற்றி சுற்றி ரவுண்டு கட்டுகிறது மீடியா. இந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தி. ஆனால் இது நயன்தாராவின் கம்பீரத்தை காட்டுகிறதே ஒழிய, துளி கூட அவர் மீது வெறுப்பை வரவழைக்கவில்லை. ஏன்?
ஆதியோடு அந்தமாக படித்து பார்த்தால்தான் அதன் பொருள் விளங்கும். ஒரு காலத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கள்வனின் காதலி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் நயன்தாரா. அப்போது விக்ரம் மகா பெரிய இடத்திலிருந்தார். அவருடன் நடிக்க நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அழைத்தாராம் விக்ரம். அவர் சார்பாக இவருடன் பேச்சு வார்த்தையும் நடந்தது. ‘சார் உங்க கூட நடிக்க ஆசைப்படுறார். ஆனால் நீங்க இப்போ எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கீங்க, அந்த படத்தை வேணாம்னு சொல்லிட்டு வந்தீங்கன்னா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கலாம்’ என்றார்களாம்.
‘சினிமாவில் யாரும் ஒஸ்தி கிடையாது. யாரும் மட்டமும் கிடையாது. நாளைக்கே விக்ரமை தாண்டி எஸ்.ஜே.சூர்யா ஜெயிக்கலாம். அது நம்ம கையில் இல்ல. கடவுள் கையில் இருக்கு. உங்க விக்ரமுக்காக நான் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்கறேன்னு கொடுத்த வாக்கை கைவிட மாட்டேன். போய் அவர்ட்ட சொல்லுங்க. இப்ப மட்டுமில்ல, இனி எப்பவுமே விக்ரமுடன் நடிக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார் நயன்தாரா. சொன்ன மாதிரியே இப்போது வரை பிடிவாதமாக இருக்கிறார்.
இது மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே? அண்மையில் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நயன்தாராவை சந்தித்தார்களாம் ஒரு டீம்! ரொம்ப மரியாதையாக அந்த சம்பவத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தாராம் நயன்தாரா.
பெம்பள சிங்கம்லே…!
Singamleaaaaaaaaa