ஆர்யாவே கேட்டாலும் அதுக்கு முடியாது! நயன்தாரா பிடிவாதம்?
வெறும் ப்ளே பாய் மட்டுமல்ல, நினைத்த மாதிரியெல்லாம் உருட்டிக் கொள்ள வசதியான ‘க்ளே’ பாயும்தான் ஆர்யா! ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ! ஆனால் அவரைதான் பாம்பு வாயில் சிக்கிய பரமபத காயாக உருட்டிக் கொண்டு வந்து கீழே விட்டுவிட்டது சினிமா. அவர் கைவசம் இருக்கிற ஒரே படம் இப்போது இஞ்சி இடுப்பழகிதான்!
இந்தப்படம் ஓடினால்தான் ஆர்யாவின் சம்பளம் அதே ரேஞ்சில் தொடரும். அடுத்தடுத்த படங்களுக்கும் அழைக்கப்படுவார். அதனால் என்ன செய்வது? அவரே இந்த படத்தை ஓட வைக்கக் கூடிய முயற்சியில் இறங்கிவிட்டார். கதைப்படி ‘ஜீரோ’ சைஸ் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படும் அவருக்கு ‘பீரோ’ சைசில் ஒரு பெண் கிடைக்கிறார். அனுஷ்கா! அந்த அதிர்ச்சியான தருணத்தில் அவர் அழகான பெண்களை நினைத்து பாடுவதாக ஒரு சுச்சுவேஷன். தன்னுடன் சேர்ந்து அந்த பாடலில் நடிக்க, ஆர்யாவின் முந்தைய ஹீரோயின்கள் எல்லாரையும் அழைத்தாராம்.
முக்கிய கண்டிஷன்… யாருக்கும் சம்பளம் கிடையாது. ஒரு நாள் கால்ஷீட் போதும். தமன்னா, காஜல், ஹன்சிகா எல்லாரும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். ஆனால் நயன்தாராவுக்கு ஆர்யா போன் போட, அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம் நயன்தாரா. ஸாரி என்னால முடியாது என்று மட்டும் பளிச்சென கூறிவிட்டாராம். ஒரு காலத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் லவ் பண்ணுறாங்க என்கிற அளவுக்கு பேசிய உலகம், இப்போது இவ்விருவருக்கும் இடையே நடந்து வரும் கலகத்தை பற்றியும் பேசி கண்கலங்குகிறது.
அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அப்படி என்னதான் சண்டை? கொய்யா மரத்தில் வௌக்கெண்ணை தடவுன மாதிரி எத்தனை முறை யோசிச்சாலும் பதில் வழுக்குதே!