உங்கள இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேனே…! நயன்தாரா புகழ்ச்சி, விக்ரம் நெகிழ்ச்சி!
“வாழ்நாளில் ஒருமுறை கூட விக்ரமுடன் இணைந்து நடிக்கவே மாட்டேன்” என்று சூளுரைத்த நயன்தாராவை, கேப்டன் விஜயகாந்தை கட்சிகள் விரட்டி விரட்டி லவ் பண்ணியதை விடவும் மோசமாக விரட்டி தன் படத்தில் கூட்டணி வைத்துக் கொண்டார் விக்ரம். இதற்காக நயன்தாராவின் வழக்கமான சம்பளத்தை விட, ஐம்பது லட்சம் வரைக்கும் எக்ஸ்ட்ரா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக ஜோடி சேர்ந்த நயன்தாராவுக்கு, அடடா… இத்தனை காலம் இந்த நட்பை மிஸ் பண்ணிட்டோமே என்று எண்ண வைத்திருக்கிறார் விக்ரம்.
பொதுவாக ‘நைஸ்’ பேச்சில் வல்லவர் அவர். நயன்தாராவுடன் பேசும்போது மட்டும் மிக்சியை இன்னும் நன்றாக ஓட விட்டு வார்த்தைகளை நைஸ் பண்ணியதில், “அடடா… இப்படியொரு மனுஷனா?” என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார் அவர். “உங்களின் அடுத்தடுத்த படங்களில் கூட இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். இத்தனை நாள் நான் முறுக்கிக் கொண்டு இருந்ததற்கு ஸாரி” என்றும் தெரிவித்தாராம்.
இப்படியொரு மனநிலைக்கு நயன்தாரா ஆளானதற்கு காரணம் விக்ரம் மட்டுமல்ல, அவரது குடும்பமும்தான். விக்ரம் மனைவியும், மகனும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், நயன்தாராவுக்கு பிடித்த ஐட்டங்களை சமைத்துக் கொண்டு வர தவறுவதேயில்லையாம். ஒரு குடும்பம் போல அவர்கள் பழக பழக, நயன்தாராவின் ஈர மனசில் இன்னும் இன்னும் ஊற்றாக பெருகிவிட்டார் விக்ரம்.