எனக்கு ஓப்பனிங் ஸாங் வேணும்! நயன்தாரா பிடிவாதம்?
நிழல்ல நீர்யானை ஒதுங்குன மாதிரி, ஒட்டுமொத்த இன்டஸ்ரிக்கும் நயன்தாரா நிழல் அவசியப்படுகிறது. துட்டு கொள்ளாத பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே கைவசமாகும் அவரது கால்ஷீட், ஏழை நடுத்தர தயாரிப்பாளர்களுக்கு எட்டாக் கனிதான், அப்பவும் இப்பவும்…
ஊரே தன் பின்னால் இருப்பதை புரிந்து கொண்ட நயன்தாரா, தாங்க முடியாத அளவுக்கு சம்பளத்தை ஏற்றியும், அந்த கூட்டம் குறைவதாக இல்லை. சரி… அடுத்த அஸ்திரத்தை எறிவோம் என்று நினைத்திருக்கலாம். இப்போதெல்லாம் தன்னைத்தேடி வரும் இயக்குனர்களிடம், “படத்துல எனக்கு ஒரு ஓப்பனிங் ஸாங் வைங்க” என்கிறாராம்.
முதல் கட்டமாக அந்த நல்ல காரியத்தை ஆரம்பித்து வைத்திருக்கிற படம் டோரா. இந்தப்படத்தில் ஆவியாக நடிக்கும் நயன்தாராவுக்கு படத்தில் பிரமாதமான ஒரு ஓப்பனிங் ஸாங் இருக்கிறதாம்.
அடுத்து யாருப்பா… நெக்ஸ்ட்!
To listen audio click below :-