குட் பாய்ஸ் பேட் பாய்ஸ் ஆனார்கள் நயன்தாராவால்? நாலு பசங்களும் நயனும்!

அறிமுக ஹீரோக்களுடன் அல்டிமேட் ஹீரோயின்கள் ஜோடி சேர்வதேயில்லை. மார்க்கெட், சம்பளம், மரியாதை, தொழில் ஒஸ்தி எல்லாவற்றையும் நிர்ணயம் செய்வதே இந்த அந்தஸ்துதான். “போயும் போயும் அவன் கூட ஜோடியா நடிக்கிறீயா?” என்று கேட்டுக் கேட்டே கீழேயிறக்கி விட்டுவிடும் இந்த சமூகம். அதனால் “சும்மாயிருந்தா கூட இருப்பேன். உன் படத்துக்கு கால்ஷீட் இல்லை” என்று சுமார் மூஞ்சி குமார்களின் படங்களை திட்டவட்டமாக கை கழுவுவார்கள் பல முன்னணி ஹீரோயின்கள்.

இவர்களில் நயன்தாரா எந்த ரகம்? கேட்டால் கிறுகிறுத்துப் போய் விடுவீர்கள். கதையில நமக்கு ஹோப் இருந்தால் போதும். கூட நடிக்கறது யாராயிருந்தாலென்ன? என்கிற அலட்சிய அனுபவம் அவருக்கு சமீப காலங்களில் நிறையவே வந்திருக்கிறது. அதனால்தான் மார்க்கெட்டில் மீந்து போன தக்காளி, சுண்டைக்காய் என்று வர்ணிக்கப்படும் ஹீரோக்களின் படங்களில் எல்லாம் தைரியமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அவர். அந்த வகையில் சற்குணம் தயாரிக்கும் படத்தில் நான்கு புது பசங்களுடன் சேர்ந்து நடிக்கிறாராம் நயன். (படத்துக்கு பூம் என்று பெயர் வைத்திருப்பதாக கேள்வி)

அந்த நான்கு பசங்களுமே நயன்தாரா முன் நடிக்க பயந்து அஞ்சி ஒளிவதையெல்லாம் சற்றே மலர்ந்த முகத்தோடு அனுபவிக்கும் நயன், “தம்பிகளா… டோன்ட் வொர்ரி. என்னை பெரிய ஆளுன்னு நினைச்சு நடுங்காதீங்க. நானும் உங்களை மாதிரிதான்” என்று ஆசுவாசப்படுத்தி ரிலாக்ஸ் பண்ணுகிறாராம். ஆரம்பத்தில் இவரை கண்டு அஞ்சிய அந்த குட் பாய்ஸ், இப்போது பேட் பாய்ஸ் லெவலுக்கு நயனுடன் அரட்டையே அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாம ஒண்ணு சொன்னா அவிங்க ஒண்ணு நினைப்பாங்க! தெறி- உஷார்- விஜய்?

சாதாரண ஒரு டீசருக்கே, தெறிக்கவிட்டுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கப்புறம் தெறி படம் தொடர்பாக எது வந்தாலும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு அவற்றை ஷேர் பண்ணிக் கொண்டிருக்க,...

Close