ஷங்கர் படம் வந்தாலும் கவலையில்லையாம்! இது தன்னம்பிக்கையா? தலைகனமா?
‘ஐயய்யோ… அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்… காவியத்தலைவன் படத்தின் கதை அப்படி. கல்வெட்டுகளில் காவி பெயின்ட் அடித்து அதில் கட்சி சின்னம் எழுதிவிட்டு போகிற அறிவிலிகள் வாழ்கிற நாடு இது. இந்த நாட்டில் அழிந்து போன நாடகக் கலையை பற்றியும், அதையே உயிராக எண்ணி வாழ்ந்த மேதைகளை பற்றியும் படம் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்?
அதை வணிக ரீதியாக எடுத்திருக்கிறாரா? அல்லது அரவான் போல ‘மிரட்டியிருக்கிறாரா’(?) என்பதெல்லாம் படம் வந்தால்தான் தெரியும். இந்த நேரத்தில் வசந்த பாலன் திருவாய் மலர்ந்திருப்பதுதான் சற்றே அதிர்ச்சியாக இருக்கிறது. இங்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் வரும்போது, தன்னால நாலு ஸ்டெப் பேக் அடித்து நிற்பது சிறு ஹீரோக்களின் வழக்கம். (அது எவ்வளவுதான் நல்ல ரேங்க் படமாக இருந்தாலும்) ஆனால் வசந்தபாலனின் எண்ணம் எப்படி இருக்கிறது தெரியுமா?
‘ஷங்கரின் ஐ வரட்டும். கமலின் உத்தம வில்லன் வரட்டும். அந்த நேரத்தில்தான் காவியத்தலைவன் வர வேண்டும் என்று சூழ்நிலை வந்தால் அதுவும் வரட்டும். என் படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது’. இதுதான் வசந்தபாலனின் ஸ்டேட்மென்ட். கத்தியும் பூஜையும் வந்தபோதே கத்தியின் மூன்று நாள் வசூல் 23 கோடி. பூஜையின் வசூல் பத்து கோடி என்கிறது புள்ளி விபரம். ரசிகர்களின் மனநிலை அப்படியிருக்க, ஐ மற்றும் உத்தம வில்லனுடன் காவியத்தலைவன் வந்தால் என்னாகும்?
சுருக்கு பைய அவுத்து, சொந்த காசுல ஊரு போய் சேர வேண்டியதுதான். இதன் மூலம் அறியப்படுவது யாதெனின், ரிலீஸ் விஷயத்தில் அடக்கம் முக்கியம். அதைவிட முக்கியம் கருத்துச்சொலல்!
sir u must understand vasanyhabalan better director then shankar