‘புதுசா தினுசா மாம்பழம் பாரு அதைப் பறிச்சி கசக்கி ஜூஸைப் போடு’

தமிழ்ப்பட உலகில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் வில்லன் நடிகர் கே.ஜி.ஆர். மேட்டூருக்கு அருகிலிருக்கும் பூமனூர் இவரின் சொந்த ஊர். இவரின் உண்மையான பெயர் கோவிந்தன். தந்தை பெயர், மகன் பெயர் ஆகியவற்றுடன் தன் பெயரையும் இணைத்து கே.ஜி.ஆர். என்று பெயரை வைத்திருக்கும் இவரை சொந்த ஊரில் இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்.

ஏ-1 பிலிம் மேக்கர்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் ‘பரிசல்’ என்ற படத்தில் வில்லனாக இவர் நடிக்கிறார். சுந்தர் என்ற புதிய இயக்குநர் இயக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் கே.ஜி.ஆர். இருக்கிறார். மிகவும் மாறுபட்ட ஒரு கதையைக் கொண்ட படம் ‘பரிசல்.’  ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், பரிசலில்தான் செல்ல வேண்டும். இருப்பதோ ஒரே ஒரு பரிசல். ஒரு பாலம் கட்டப்பட்டால், சீக்கிரம் நகரத்திற்குச் செல்லலாம் என்று கிராமத்து மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக இருக்கிறார் கிராமத்தின் பண்ணையாரான உத்ரபாண்டி. பாலம் கட்டப்பட்டு விட்டால், கிராமத்து மக்கள் வேலை தேடி நகரத்திற்குச் சென்று விடுவார்கள், பிறகு தன் வயல்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள் என்று அவர் நினைப்பதே காரணம். அதனால் பரிசல் ஓட்டும் ‘தலைவாசல்’ விஜய்யை அவர் கொன்று விடுகிறார். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் ‘நிழல்கள்’ ரவியையும் கொன்று விடுகிறார். பாலம் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கும் யாரையும் தன் அடியாட்களை வைத்து தீர்த்துக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறார் உத்ரபாண்டி. இறுதியில் என்ன நடந்தது? பாலம் கட்டப்பட்டதா, இல்லையா? இதுதான் ‘பரிசல்’ படத்தின் கதை. இந்த கொடூர குணம் கொண்ட உத்ரபாண்டியாக நடிப்பவர்தான் கே.ஜி.ஆர்.

‘பரிசல்’ படத்தில் கே.ஜி.ஆருக்கு ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது.

நடன நடிகை ரிச்சாவுடன் இவர் சேர்ந்து ஆடும்.

‘புதுசா தினுசா

மாம்பழம் பாரு

அதைப் பறிச்சி

கசக்கி

ஜூஸைப் போடு’

என்ற பாடல், நிச்சயம் படம் திரைக்கு வரும்போது ஹிட் ஆகும் என்கிறார் கே.ஜி.ஆர்.

ஆரம்ப காலத்தில் கல் வேலை, கிணறு தோண்டும் வேலை, லாரி ஓட்டுநர் என்று பல தொழில்களைச் செய்திருக்கும் கே.ஜி.ஆர்., பின்னர் லாரியைச் சொந்தத்தில் வைத்தும் இருக்கிறார். பல வருடங்களாக கான்ட்ராக்ட் தொழிலிலும் ஈடுபட்டு, ஏராளமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார். இது தவிர, சொந்த ஊரில் விவசாயமும் செய்கிறார்.

‘பரிசல்’ படத்தில் மிகவும் அருமையாக இவர் நடித்ததைப் பார்த்து, ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய் இருவரும் இவரை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.ஜி.ஆர். ‘வீர திருவிழா’ படத்தில் பொன்வண்ணனின் சம்பந்தியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் இன்னொரு படம் ‘அடையாளம்.’

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘சலாம் டூ கலாம்’ – கலாமிற்கு ஒரு காணிக்கை’ இசை வீடியோ ஆல்பம்

மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் அக்டோபர் 15. அதையொட்டி சென்னை குன்றத்தூரில் உள்ள ‘லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளிக்கூட’மும்,...

Close