அஜீத் படம் பண்ணணும்னு ஆசையாயிருக்கு! கூடாரத்திற்குள் தலையை விட்ட ஒட்டகம்?

தேனீ கடிச்சா வலிக்கும், ஆனால் தேனை ருசிச்சா இனிக்கும்ல? இன்றைய தேதிக்கு அஜீத் படம் என்றால் பட்ஜெட் கழுத்தை தாண்டி, நெற்றியை டச் பண்ணும். ஒருவகையில் பார்த்தால், ‘இது ஓவரோ?’ என்று தோன்றினாலும் இறைச்ச தண்ணிக்கு விளைச்சல் நிச்சயம் என்பதால் விழுந்தடித்துக் கொண்டு அவரது கால்ஷீட் வாங்க மொய்கிறார்கள் தயாரிப்பாளர்கள். வேதாளம் படம் வெளியான முதல் நாள் ஒரே தியேட்டரில் மட்டும் பதினாலு லட்சத்தை வசூலித்து சாதித்த விஷயத்தையெல்லாம் மனதில் கொண்டு இந்த கால்ஷீட் வேட்டைக்கு தயாராகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அதுவும் தமிழ்நாடு முழுவதும் இந்த வசூலை கண்ணெதிரே உர்ஜிதம் செய்த கம்பெனி ஒன்று, ‘பழம் எப்போ விழும்?’ என்று மரத்திற்கு கீழேயே காத்திருக்கிறது என்பதுதான் இந்த செய்தியின் ஆகப்பெரிய விடை. சற்று விரிவாக பார்க்கலாமா?

அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பது சத்யஜோதி நிறுவனம்தான் என்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டது. அதே வேதாளம் படத்தின் டைரக்டர் சிவாதான் இப்படத்திற்கும் டைரக்டர். கடந்த முறை வேதாளம் படத்தை தமிழகம் முழுக்க வாங்கி வெளியிட்ட மிகப்பெரிய நிறுவனம் ஒன்று இந்த முறையும் இந்த படத்தை வாங்கி வெளியிடும் என்று நினைத்தால், அங்குதான் ட்விஸ்ட். ஆளுங்கட்சிக்கு நெருக்கமான அந்த நிறுவனம், இந்த முறை தானே ஒரு பார்ட்னராக உள்ளே நுழைந்து இந்த படத்தை தயாரிக்க விரும்புகிறதாம். தனி தயாரிப்பாளர் என்று நேற்று வரைக்கும் நம்பியிருந்த சத்யஜோதி, தனது நாற்காலியில் கொஞ்சம் இடம் கொடுத்து, “நீங்களும் வேணும்னா உட்காந்துக்கோங்க” என்று கூறியிருக்கிறதாம். இந்த பெருந்தன்மை நீடிக்குமா? அல்லது படம் துவங்கும்போது ஏதேனும் மாற்றம் வருமா? எது எப்படியோ….

இன்றைய நிலவரப்படி இரட்டை நாதஸ்வரம் ரெடி! கச்சேரி எப்போங்கறதுதான் சஸ்பென்ஸ்!

Read previous post:
என்னை வீட்டுக்குள் சேர்க்க வேண்டாமென சொன்னாரா? ரஜினி பற்றி அனிருத் மனம் திறப்பு

முளைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, மூடியாவது, வேலியாவது? அனிருத்தின் பீப் பாடலுக்கு பிறகு “அவ்வளவுதான் தம்பி...” என்ற முடிவுக்கு வந்த கோடம்பாக்கம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி, அசால்ட் அனிருத்தும்...

Close