அருவருப்பூட்டுகிறது…
தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், வேறொரு நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை கடும் ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நிருபரை காய்ச்சி எடுத்துவிட்டார். அவர் கேட்ட அந்த கேள்வி இதுதான். “சிம்பு அனிருத் இசையில் உருவான பீப் பாடல் சர்ச்சை பற்றி உங்கள் கருத்தென்ன?” இதையடுத்து அந்த நிருபரிடம் எரிந்துவிழுந்த இளையராஜா, உனக்கு அறிவிருக்கா? என்றார் திரும்ப. திரும்ப.
சம்பந்தப்பட்ட அந்த காணொளிக்காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். திரைப்பட விமர்சகர் சுரேஷ் கண்ணன் தனது முகநூலில் எழுதியிருப்பதை இங்கே வாசகர்கள் பார்வைக்கு தருகிறோம்-
இளையராஜா சிறந்த இசையமைப்பாளர்தான். ஆனால் அவரை விசிறி சாமியாராக மாற்றி பீடத்தில் அமர்த்தி வழிபட விரும்புவர்கள் வழிபட்டுக் கொள்ளட்டும். ஆனால் இசையமைப்பாளர் என்கிற முக்கிய தகுதியைத் தவிர ஒரு சாதாரண நபருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு கூட அவரிடம் இல்லாததை தம்முடைய ஆணவமான செய்கைகளின் மூலம் அவர் முன்பு பலமுறை நிரூபித்துள்ளார்.
அவருடைய இசைத்திறமையையொட்டி இந்த தவறுகளை அவரது ரசிகர்கள் தயவுசெய்து நியாயப்படுத்தாதீர்கள். அவர் தன்னை சாதாரண மனிதராக தெரிவித்துக் கொண்டு ஆயிரம் கோபப்படட்டும். அது சரியாக இருக்கும். ஆனால் அவர் தன்னை ஓர் ஆன்மிகவாதியாக சித்தரித்துக் கொண்டு அதற்கான எந்தவித சாட்சியங்களும் இல்லாமல் தன்னை சராசரி நபர் எவரும் நெருங்க முடியாத பீடாதிபதியாக நினைத்துக் கொண்டு அதற்கேற்ற பாவனைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் வரலாறு அவருக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்கும். ஒரு சக மனிதரிடம் சகிப்புத்தன்மையை, பொறுமையைக் காட்டக்கூட முடியாத நபர் எப்படி தன்னை எப்படி ஓர் அசாதாரண மனிதராக சித்தரித்துக் கொள்ள முடியும்? பொதுமக்களிடமிருந்து அருவருத்து விலகி நிற்கும் ஒரு கலைஞன் எப்படி உன்னதமானவனாக இருக்க முடியும்?
அந்த நிருபர் பொருத்தமில்லாத சூழலில் பொருத்தமில்லாத கேள்வியைக் கேட்டதாக ஒருவேளை அவர் நினைத்திருந்தால் இதற்கு ‘பதிலளிக்க விரும்பவில்லை’ என்ற ஒற்றை வார்த்தையில் தவிர்த்திருக்கலாம். அப்படியும் அந்தக் கேள்வி ஏதோ அவருடைய துறைக்கு தொடர்பில்லாததோ,அல்லது மகா பஞ்சமா பாதகச் செயலுடன் தொடர்புள்ளதோ இல்லை.
ஆயிரம் முக்கல் முனகல்களுடன் பல அருவருப்பான பாடல்களை தம்முடைய தொழிலுக்காக செய்திருக்கும் ஓர் இசையமைப்பாளர் தன்னை ஒரு சுத்த ஒழுக்கவாதியாக உருவகித்துக் கொண்டு ‘சீ சீ.. என்று அருவருப்பு காட்டும் அந்த போலித்தனம்தான் அதிக அருவருப்பூட்டுகிறது.
ஓர் உதாரணம் சொல்கிறேன். புஷ்பவனம் குப்புசாமி அழகி படத்திற்காக பாடிய அனுபவத்தைச் சொல்லும் போது ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ என்கிற பாடல் வார்த்தை ஆபாசமான அர்த்தம் தருவதை உணர்ந்து அதை தவிர்க்க தாமாகவே வேறு வார்த்தையைப் போட்டு பாடியிருக்கிறார். ஆனால் இளையராஜா விடாப்பிடியாக வற்புறுத்தி அந்த வார்த்தையைத்தான் பாட வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார். இப்படி உருவான பல ஆபாசப் பாடல்களில் இசைஞானியின் பங்களிப்பும் இருப்பதையும் அதனால் விளைந்த சமூகச் சீரழிவுகளையும் அவராலோ மற்றவர்களாலோ மறுக்க முடியுமா?
தன்னையோர் ஆசார சீலராகக் கருதிக் கொண்டு பிராமண அடையாளங்களுடனும் மனோபாவத்துடன் நெருக்கமாக மற்றவர் உணரும்படி சித்தரித்துக் கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை தனது ஆய்வு நூல் ஒன்றில் முனைவர் குணசேகரன் மிகச்சரியாக சுட்டிக்காட்டிய போது தன்னை அம்பலப்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் போட்டவர்தான் இந்த ஆன்மீகவாதி.
ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்து ஒருவர் முதல்வராக அமர்ந்த நிகழ்விற்கு எவ்வித கூச்ச நாச்சமும் தார்மீக உணர்வும் இல்லாமல் அந்த நிகழ்விற்கு வந்து அமர்ந்து கொண்டவர்தான் இந்த இசைஞானி. அதிகாரத்தின் முன் ‘அறிவிருக்கா?’ என்கிற கேள்வியைக் கேட்டு விட முடியுமா?
ஒரு பத்திரிகையாளரின் முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் இசைஞானி தனது ஒளிவட்டத்தின் பிரகாசத்தைக் குறைத்துக் கொண்டு தனிமையில் கண்ணாடி முன்பு இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டால் ஒருவேளை பதில் கிடைக்கலாம்.
நன்றி- சுரேஷ் கண்ணன் முகநூலிலிருந்து
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்- https://youtu.be/E3_BtwlVGRU
இலை மறைவு காய் மறைவு என்பது தான் இலக்கியம்…
இளைய ராஜா பீப் கொடஞ்ச பீப் கொண்டு வந்து தரவா என்று பாடல் போடவில்லை..
எந்த இடத்தில் என்ன கேட்ப்பது?
செருப்பால் அடிக்காமல் விட்டதாலே ராஜா பக்குவம் ஆகிவிட்டார் என்று நாம் உணரலாம்.
இதே கேள்வி யை ரஜினி, டி.ஆர்,இவர்களிடம் கேட்கலாமே?
ஜெட்லி டெல்லி விசயத்தை அரசியல் விதிகளான கலைஞர்,ஜெயா விடம் போய் கேட்க்க முடியுமா?
இளைய ராஜா என்றால் இளக்காரம்?
edha venalum kepanga poruthutu poganuma enna
சுரேஷ் கண்ணன் தன் மனைவி சகோதரிகள் தாயார் பாட்டியார் என்று எல்லோருக்கும் பீப்ப் இருக்கு என்ற ரீதியில் இந்த கட்டுரையை முடித்திருந்தால் அட்டகாசப் பீப்பாக இருந்திருக்கும்.
சுரேஷ் கண்ணனுக்கு முதல்ல இங்கீதம் என்றால் என்ன என்பதை யாராவது கற்று கொடுத்தால் தேவலை.. பத்திரிக்கையாளருன்னா எதவேனும்முன்னாலும் எங்கவேனுமுன்னாலும் கேட்கலாமா? அதுவும் இந்த அர கிருகன்கல பத்தி … உதவிக்கு பாராட்டு விழா நடத்துற இடத்துல.. பரபரப்பு செய்திக்கு கை அரிப்பு எடுத்து திரியும் வெங்கப்பயலுகலுக்கு இவரு சொம்பு தூக்கி…
இது ஷங்கர் என்ற பத்திரிக்கையாளர் எழுதியது அது அப்படியே உங்களுக்கு ….
இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் ‘கத்துக்குட்டி’ நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல.
மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள்.
மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் ‘சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?’ என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.
அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை.
அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில்.
இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், ‘அறிவிருக்கா’ மட்டுமல்ல… இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும்.
அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்… நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல!
இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே… டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது… இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். ‘தில்’ இருக்கா… ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்!
மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான்.
ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!
இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன் வாந்தியெடுத்ததை இங்கே போட்டிருக்கீங்க. உங்கள் மீதுள்ள மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் ஆர்எஸ்.
நீங்கள் அந்த கேடுகெட்டவனை பத்தி சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை. இவனை போயி இசைஞானி என்று அழைப்பது தவறு.
முன்னாள் ராஜா ரசிகன்
இசைஞானி இறந்துவிட்டார்….! இளையராஜா வாழ்கிறார்…!
சரிங்க ஜெய் அதை உங்க பேரிலேயே பதிவிடலாமே ? ஏன் இந்த அடுத்தவன் எடுத்த வாந்தி எடுத்து குடிக்கும் வேலை ?
சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவை உலகம் இசைக்கடவுளாக மட்டுமல்ல, கடவுளாகவே தலை மீது வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது -வெவரம் புரியாமல் அல்லது வெவஸ்தையில்லாமல்.
இளையராஜாவை நன்கு அறிந்தவர்களுக்கு மக்களின் இந்த மனோநிலை மடத்தனமாகவவே தோன்றும்.
காரணம்… சினிமா இசையில் நிபுணரான இளையராஜா தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டாடத்தக்க எவ்வித குணமும் இல்லாதவர்.
அது மட்டுமல்ல, அடிப்படை பண்புகள் கூட இல்லாத சராசரிக்குக் கீழான மனிதர் என்ற உண்மையும் அவரை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும்.
சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இளையராஜாவின் ஆணவத்தைக் கண்டு கொதித்துப்போயிருந்தாலும் இளையராஜா பிரபலமான மனிதர் என்பதால் எவரும் இளையராஜாவின் உண்மை முகத்தை வெளிப்படையாய் சொன்னதில்லை.
இப்படியான சூழலில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தில் இளையராஜாவின் சொரூபம் வெளியுலகத்துக்கு தெரிந்துவிட்டது.
ஒரு செய்தியாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இளையராஜாவின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இளையராஜாவின் திமிர்த்தனத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா பற்றி கூறிய கருத்து கவனம் ஈர்க்கிறது.
“ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்” என்று தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
திரையுலகப்பொறுக்கிகளான சிம்பு அனிருத்தின் ஆபாசப்பாடல் குறித்து, இளையராஜா உட்பட சினிமாக்காரர்கள் வாயைப்பொத்திக் கொண்டிருக்கும்போது துணிச்சலாக கண்டித்து கருத்து சொன்னதும் ஜேம்ஸ்வசந்தன்தான்.
சரிங்க ஜெய் அதை உங்க பேரிலேயே பதிவிடலாமே ? ஏன் இந்த அடுத்தவன் எடுத்த வாந்தி எடுத்து குடிக்கும் வேலை ?