விஜய் டி.வி யில் நியூதமிழ்சினிமா.காம்!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது காபி வித் டி.டி. முன்னணி பிரபலங்களை நிகழ்ச்சிக்கு அழைத்து இனிப்பும் இன் சுவையுமாக பேசுவதில் திவ்யதர்ஷினிக்கு நிகர் அவரே. பூக்கள் பேசினால் வார்த்தை தீருமோ என்பதற்கு டி.டி பெரிய உதாரணமாக இருந்தாலும், அவரது வளவள பேச்சுக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் ஒயின் அடித்த போதையோடு காத்திருப்பதுதான் விசேஷம்.
அவரது காபி வித் டிடி நிகழ்ச்சியில்தான் நமது நியூதமிழ்சினிமா.காம் இணையதளத்திற்கும் இடம் கிடைத்திருக்கிறது. அண்மையில் வெளியான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் டைரக்டர் மிஷ்கினும் டைரக்டர் பாண்டியராஜனும். சில பல கேள்விகளுக்கு பிறகு புகைப்படம் பார்த்து பதில் சொல்கிற எபிசோட். இசைஞானி இளையராஜாவும் மிஷ்கினும் இருக்கும் படம் பற்றி பதில் சொல்லிக் கொண்டிருந்த மிஷ்கின் அடுத்த பட்டனை க்ளிக் செய்தால், அட… நம்ம இணையதளத்தில் வெளிவந்த செய்தி!. (Watch 30:30 ) அதுவும் நாம் வெளியிட்டிருந்த அதே டிசைனோடு.
‘கதவை சாத்திக் கொண்டு காச் மூச்? ஆத்திர மிஷ்கின். அசைந்து கொடுக்காத பாலா’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட செய்தி. ( https://wh1049815.ispot.cc/mysskin-tension/) இது குறித்து பதிலளித்த மிஷ்கின், நானும் பிரைவேட் பர்சன். பாலாவும் பிரைவேட் பர்சன். கதவை சாத்திக் கொண்டுதான் பேசுவோம். ஆனால் நாங்க என்ன பேசிகிட்டோம்னு யாருக்கும் தெரியாது. பட்… இதுல சொல்லியிருக்கிற மாதிரி எதுவும் நடக்கல என்றார்.
விஜய் டி.வி க்கு நன்றி
முழு நிகழ்ச்சியையும் பார்க்க…
https://www.youtube.com/watch?v=HskWmiPjcnk
அடடே, ரொம்பப் பெருமையான விசயந்தான் அந்து.
இப்படி ஒரு பாராட்டு கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.