இவர்தான் அடுத்த விஜயசாந்தி!

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் அர்த்தநாரி . ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் . படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட , மைக்ரோசாப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவைத்தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது .

நாயகன் ராம்குமார் பேசும்போது ” அருந்ததி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்த விஜய சாந்தியாக அவர் வருவார் ” என்றார் .

கோவைத் தம்பி தன் பேச்சில் “ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் , அப்புறம் நடிக நடிகையர்கள் , அப்புறம் இயக்குனர்கள் கையில் இருந்தது . இப்போது அது திரையரங்கு உரிமையாளர்கள் கையில் இருக்கிறது . அது கூட தப்பில்லை . ஆனால் அந்தத் திரையாங்கு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறார்கள் . இது மாறும்வரை தமிழ் சினிமா நல்ல நிலைக்கு வராது ” என்றார் .

நாசர் பேசும்போது “இங்கே திரையிடப்பட்ட பாடல்களால் இந்தப் படம் என்னவோ காதல் படம் போல இருந்தாலும், இந்தப் படத்துக்குள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் பற்றிய ஒரு ஸ்ட்ராங்கான கதை உண்டு .அது இந்தப் படத்துக்கு உதவும் . இயக்குனர்கள் சங்கத்துக்கு பாரி வேந்தர் தனது குழும மருத்துவமனைகள் மூலம் செய்யும் உதவிகளை நடிகர் சங்கத்துக்கும் செய்ய வேண்டும் ” என்றார் .

பாரி வேந்தர் தன் பேச்சில் ” என்னோடு எப்போதும் உடன் இருக்கும் முத்தமிழ் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான் .படத்தில் நல்ல கதை இருக்கிறது . அவர் இந்தப் படத்தில் வெற்றி பெற்று நிறைய படங்களை எடுக்க வேண்டும் ” என்றார்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Yenru Thaniyum – Tamil Feature Film – Official Trailer

Close